உங்க கிட்ட பான் கார்டு இருக்கா? ரூ.10000 அபராதம் கட்டுவதை தவிர்க்க.. இதை ஃபாலோ பண்ணுங்க!
சென்னை: பெரும்பாலும் மக்கள் PAN (Permanent Account Number) எண்ணை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். நீங்களும் அப்படி ஒருவர் என்றால்.. நீங்கள் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
PAN உடன் தொடர்புடைய விதிகள் பெரும்பாலும் மிகவும் கடுமையானவை. நீங்கள் வைத்திருக்கும் ஆதாருக்கு இணையாக ஏன் ஆதாரை விட முக்கியமானதாக பாக்கப்படுவது பான் எண் ஆகும்.

இதற்குக் காரணம், பான் என்பது உங்கள் நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் வருமான வரித் துறை கண்காணிக்க பயன்படுத்தும் எண்ணாகும். ஒரு தனிப்பட்ட வரி செலுத்துவோர் அல்லது ஒரு நிறுவனத்தின் வரிப் பொறுப்பை மதிப்பிடுவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பான் எண் அமலுக்கு பிறகு வரி ஏய்ப்பு வழக்குகள் குறைந்துள்ளன. வருமான வரித் துறையானது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்ட் என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பாண் எண் அவசியம் ஆகும்.
இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு கட்டாயம்.
பான் கார்டு முக்கியம்: நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.
ஏன் முக்கியம்: உங்கள் பான் கார்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஏன் முக்கியம் என்பதை இங்கே பார்ப்போம்.
முதலில் உங்கள் பான் எண் திருடப்பட்டாலோ அல்லது வேறொருவரின் கைகளில் சிக்கினாலோ அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட பான்களை பயன்படுத்தும் வழக்குகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. உங்களுக்கே தெரியாமல் அதை வைத்து லோன் எடுக்க கூட வாய்ப்புகள் உள்ளன. சில நேரங்களில் திருடப்பட்ட பான்கள் சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஹவாலா மோசடிகள் கூட இப்படி பான் அட்டைகள் மூலம் செய்யப்படுகின்றன. மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களின் பான் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். இது பான் எண்ணைத் தவறாகப் பயன்படுத்தினால் சிக்கலில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
உங்கள் பான் அட்டை மூலம் தவறாக பண பரிமாற்றம் செய்யப்பட்டால், அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால். அதற்கு ரூ. 10 ஆயிரம் கூட அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதை தடுக்க நீங்கள் உடனே போலீசில் புகார் அளிப்பதே சரியானது .
அபராதம்: அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருப்பது சட்டவிரோதமானது. ஒரு நபருக்கு ஒரே ஒரு பான் மட்டுமே இருக்க வேண்டும. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருந்தால், வருமான வரித்துறை அவருக்கு அபராதம் விதிக்கலாம். ரூ. 10 ஆயிரம் வரை இதற்கும் அபராதம் விதிக்கப்படும். PAN இல் தவறான தகவல்கள் இருந்தால், வங்கி உங்கள் கணக்கை முடக்கலாம். எனவே உங்கள் பான் எண்ணில் கவனக்குறைவாக ஏதேனும் தவறான தகவலை உள்ளிட்டிருந்தால், அதைத் திருத்த வேண்டும். உங்களிடம் தவறுதலாக இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ஒன்றை வருமான வரித்துறைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications