மகிழ்ச்சியாக இருங்கள்.. டென்ஷனை விட பெரிய வியாதி கிடையாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவை நினைத்து நினைத்து டென்ஷன் ஆயிட்டே இருக்கீங்களா.. தேவையே இல்லைங்க. அது சாதாரண நோய்தான். அதை நினைத்து பயப்படவே தேவையில்லை. மாறாக கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தாலே போதுமானது.

அதை விட முக்கியம் உங்களை உங்களுடைய சுற்றுப்புறத்தை மனசை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் நம்மை நோயிலிருந்து எதிர்த்துப் போரிடும் மன வலிமையைக் கொடுக்கும். எனவே வழக்கம் போல மகிழ்ச்சியாக இருங்கள்.. உற்சாகமாக இருங்கள்.

எத்தனையோ தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றும் சக்தி மனிதனுக்கு உண்டு. அது போல நம்மால் கொரோனாவையும் வெல்ல முடியும். அதனால் அதைப் பற்றி கவலைப்படாமல் மனசை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல்

உங்களுக்கு பிடித்தப் பாடல்களைக் கேளுங்கள். ஒவ்வொருவர்க்குள்ளும் ஒரு திறமை நிச்சயம் இருக்குங்க. அந்த திறமையை வெளிக்கொணர்ந்து மகிழ்ச்சியா இருங்க. உங்களுக்கு ஓவியம் நன்றாக வரையும் திறமை இருக்கலாம். நீங்கள் வேலைக்குச் செல்வதால் ஓவியம் வரைய முடியவில்லை என்றால் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஓவியராக மாறுங்கள்.

 ஜாலியா விளையாடலாம்

ஜாலியா விளையாடலாம்

உங்களுடைய குழந்தைகளுடன் நீங்கள் விளையாடிய சிறுவயது விளையாட்டுகளை விளையாடுங்கள். உங்களது பள்ளி கல்லூரி நண்பர்களோடு போனில் உறவாடுங்கள். உங்கள் குழந்தைளுக்கு உங்கள் துணைக்கு பிடித்த உணவுகளைச் சமைத்துப் பரிமாறுங்கள். இதில் போட்டி வைத்துக் கொண்டு சமைக்கலாம்.. நீ சமைச்சா இது பரிசு.. நான் நல்லா சமைச்சா இது பரிசு என்று ஜாலியாக விளையாடலாம்.

 சானிட்டைசர் போடுங்க

சானிட்டைசர் போடுங்க

உங்கள் வீட்டு கதவு கைப்பிடிகளை சானிடைசர் போட்டு தினமும் துடையுங்கள். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுங்கள்.உங்கள் வீட்டையும் சொர்க்கப்பூமியாக்கி நீங்களும் மகிழ்ச்சியோடு இருங்கள். கொரோனாவிலிருந்துத் தப்பிக்க வீட்டில் இருங்கள். பாதுகாப்பு வழிமுறைகளைப் பி்ன்பற்றுங்கள். மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு தற்காலிகமான சோதனைக் காலம் அவ்வளவே. இதுவும் கடந்து போகும் என்று எண்ணுங்கள்.

 சூப்பர் தோட்டம்

சூப்பர் தோட்டம்

உங்கள் வீட்டில் தோட்டம் இருந்தால் அதில் நேரம் செலவிடுங்கள். உங்களுக்கு கதை கவிதை போன்றவை எழுத வரும் என்றால் அதற்கு முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்வோம். நாமும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+