போருக்கு ரெடியாக இருங்கள்.. தயார் படுத்திக்கொள்ளுங்கள்! ராணுவத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு
பெய்ஜிங்: சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்

என்ன பிரச்சனை: தைவான் சீனா இடையில் அப்படி என்னதான் பிரச்சனை.. தைவான் என்பது தனி நாடா? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம் பின்வருமாறு,
சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவானை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த தைவான் என்பது வரலாற்று ரீதியாக சீனாவுடன் தொடர்பு கொண்டது. சீனாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்கள் தைவானில் குடியேறி வாழ்ந்து வந்தன. வரலாற்று முறைப்படி தற்போது தைவானில் இருப்பது சீன முன்னோர்கள்தான். அங்கு இருக்கும் மக்கள் ஆஸ்ட்ரோனிஷியன் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் சீனாவில் இருந்து தைவானில் குடியேறியவர்கள்.
இப்படிப்பட்ட தைவான் AD239 ஆண்டு வரை சீனாவின் கட்டுப்பாட்டிலும், பின்னர் டச்சு அரசு கட்டுப்பாட்டிலும். பின்னர் மீண்டும் 1683 to 1895 வரை சீனா கட்டுப்பாட்டிலும் வந்தது. பின்னர் தைவான் சீனா - ஜப்பான் போரின் முடிவில் ஜப்பான் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தைவான் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டிற்கும் சென்றது. அப்போது தைவானை சீனா ஜப்பானிடம் இருந்து மீண்டும் கைப்பற்ற உதவியாக இருந்ததே அமெரிக்காதான் என்பது வேறு கதை. இதன் பின் சீனாவில் 1949ல் ஏற்பட்ட உள்நாட்டு போர் அனைத்தையும் மாற்றியது. சீனாவை நிர்வகித்து வந்த சியாங் கேசிங்கிற்கு எதிராக மாவோ சார்பாக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அது உள்நாட்டு போராக வெடித்தது. இந்த போரில் மாவோ வெற்றிபெற்று சீனாவில் ஆட்சிக்கு வந்தார். தோல்வி அடைந்த அதிபர் சியாங் கேசிங் தைவானுக்கு தப்பி ஓடி அங்கு தனி நிர்வாகம் நடத்தி வந்தார். இவர் தைவானில் இருந்து கொண்டு.. நாங்கள்தான் உண்மையான சீனா என்று கூறினார். சீனாவில் இருக்கும் அரசு பொய்யானது என்று கூறினார்.
முதலில் பல நாடுகள் தைவானில் இருக்கும் அரசை உண்மையான சீன அரசு என்று அங்கீகரித்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சீனாவை தனி நாடாக உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, பெய்ஜிங் உடன் வர்த்தகம் தொடங்கின. இதையடுத்து தைவான் போக போக நாங்கள்தான் உண்மையான சீனா என்று சொல்வதை விடுத்து.. நாங்கள் தனி நாடு. நாங்கள் தைவான் என்று சொல்ல தொடங்கியது. இதுதான் தைவான் - சீனா மோதல் கதை. ஆனால் தைவான் ஐநா விதிப்படி இன்னும் தனி நாடு ஆகவில்லை. அமெரிக்காவும் இதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா தூதரக ரீதியாக தைவானுடன் உறவில் இல்லை.
இதில் அமெரிக்கா இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. ஆனால் சீனாவை சீண்டுவதற்காக தைவானை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அதோடு சீனாவிடம் இருந்து பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகிறது.
தைவான் தனி நாடாக மாறினால் அது சீனாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சிக்கல். உக்ரைன் நேட்டோவில் சேர்வது ரஷ்யாவிற்கு எப்படி சிக்கலோ அப்படித்தான் தைவான் தனி நாடாக மாறினால் சீனாவிற்கும் சிக்கல். ஏற்கனவே கடந்த பல மாதங்களாக தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தைவான் அமெரிக்காவுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறது.
இதனால் தைவான் மீது கடும் கோபம் அடைந்த சீனா தற்போது தைவானை சுற்றி வழித்து உள்ளது. 40 போர் விமானங்கள், 30 கடற்படை விமானங்கள் 20க்கும் மேற்பட்ட போர்கப்பல்களை வைத்து சீனா தைவானை சுற்றி வளைத்து உள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications