’பீச் வெட்டிங்’ திருமண நிகழ்ச்சிகளை இனி கடற்கரையில் நடத்தலாம்.. தமிழக அரசின் புதிய திட்டம்.. அடி தூள்
சென்னை: பெரும் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமே நடத்தி வந்த பீச் வெட்டிங் திருமண நிகழ்ச்சிகளை இனி சாதாரண நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களும் நடத்தும் வகையில், தமிழக அரசின் சுற்றுலாத்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி இசிஆர் கடற்கரையில் பீச் வெட்டிங் நடத்திக்கொள்ளலாம் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
திருமண நிகழ்ச்சிகளை சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலும் திருமண மண்டபங்களில்தான் நடத்தப்படுகின்றன. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்றால் பெரிய ஹால் ஆக ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள்.

தமிழக அரசு அதிரடி திட்டம்
பிரபலங்கள், தொழில் அதிபர்கள் போன்றவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீச்களில் பிரமாண்டமாக திருமணங்களை நடத்துவதை பார்க்க முடிகிறது. சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற ஆடம்பர திருமண நிகழ்ச்சிகள் அவ்வப்போது வைரல் ஆகும். இதுபோன்று பீச்களில் திருமணம் நடத்துவது என்பதெல்லாம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனிதான் போல, என பலரும் நினைப்பதை பார்க்க முடியும்.
ஏனெனில் இங்குள்ள ஹோட்டல்களில் வாடைக்கு எடுத்து பீச்களில் திருமணம் நடத்த வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் செலவு ஆகும். அந்த அளவு ஆடம்பரமாக நம்மால் திருமணத்தை நடத்த முடியாது என நினைக்கும் நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி திட்டம் ஒன்றை கையில் முன்னெடுத்துள்ளது.
கட்டணம் எவ்வளவு
அதாவது, தமிழக அரசின் சுற்றுலா மற்றும் வளர்ச்சி கழகம் (TTDC) பீச் வெட்டிங் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலா வளர்ச்சி கழக அனுமதியுடன் இனி திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும். தனியார் ரிசார்ட்டுகளைவிட குறைந்த கட்டணத்தில் அழகிய கடற்கரை சூழலை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
முதற்கட்டமாக, மாமல்லபுரம் ஹோட்டல் தமிழ்நாடு பீச் ரிசார்ட்டின் தனி கடற்கரை பயன்படுத்தப்படுகிறது. இடத்திற்கான முன்பதிவு கட்டணம் பராமரிப்புக்காக சுமார் ரூ. 10,000 செலுத்த வேண்டியிருக்கும். சைவ உணவு ஒரு நபருக்கு ரூ.700-லிருந்தும், அசைவ உணவு ரூ.1,100-லிருந்தும் துவங்குகிறது. 22 மணி நேர தங்குமிடம் சுமார் ரூ.5,000 செலவில் கிடைக்கும்.
பீச்சில் திருமண நிகழ்ச்சி
மேடை, அலங்காரங்கள், விளக்குகள் போன்ற ஏற்பாடுகளை திருமண வீட்டினர் செய்து கொள்ள வேண்டும். இத்திட்டதை விரிவு படுத்தும் வகையில், கோவளம், மெரினா, நாகப்பட்டினம், இராமநாதபுரம் கடற்கரைகளை ப்ளூ ஃபிளாக் தரத்திற்கு அரசு மேம்படுத்துகிறது. முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்து தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது: - பீச் வெட்டிங் என்பது தற்போது வெளிநாடுகளில் அதிகம் அளவில் நடத்தப்படுகிறது. இந்தியாவிலும் பீச்களில் இயற்கையான சூழல்களுக்கு திருமண நிகழ்ச்சி நடத்தப்படுவது தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுற்றுலா திட்டங்கள் மட்டும் இன்றி இதுபோன்ற கடற்கரை திருமணம் என்ற முறையை பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
இனி குறைந்த விலையில் நடத்த முடியும்
எனவேதான் இந்த திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் வாயிலாக இது செயல்படுத்தப்பட்டாலும் அரசு சார்பில் இனி குறைந்த விலையில் இதில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும். இது சாதாரண நடுத்தர மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில் இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்குள்ள கடற்கரை மணலில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாம்" என்று தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications