ரஜினியின் கூலி திரைப்பட பாடலில் வந்த அழகு சிலை.. இத்தாலி நடிகை மோனிகா பெல்லுசி யார் தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தின் இரண்டாவது பாடலாக மோனிகா பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. பூஜா ஹெட்கே நடனமாடியுள்ள இந்த பாடலானது, புகழ்பெற்ற இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு புகழஞ்சல் செலுத்தும் விதமாக இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மோனிகா என்ற பெயர் கொண்ட அந்த இத்தாலி நடிகை யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பற்றி இங்கு பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 'மோனிகா', கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பாடல், புகழ்பெற்ற இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு புகழஞ்சல் செலுத்தும் விதமாக இருந்தது. இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே தனது கவர்ச்சியான நடனத்தால் ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளார்.

சிவப்பு நிற உடையில் தோன்றும் பூஜா ஹெக்டே, மோனிகா பெல்லுச்சியின் புகழுக்கு உரிய மரியாதையை செலுத்தும் விதமாக காட்சியில் அசத்தியுள்ளார். மோனிகா பெல்லுச்சி 'மலினா' மற்றும் 'ஸ்பெக்டர்' போன்ற படங்களில் இதே நிற உடையில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் டிரெண்டிங் ஆகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மோனிகா என்ற பெயர் கொண்ட அந்த நடிகை யார்? என்று தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால், என்னவோ மோனிகா இப்போது டிரெண்டிங் ஆகிவிட்டார். இத்தாலிய நடிகையான இந்த மோனிகா யார் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மோனிகா பெல்லுச்சி தனது அழகும் திறமையும் மூலம் உலகளவில் பிரபலமானவர். 'மலினா', 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்', 'தி பேஷன் ஆஃப் தி கிறிஸ்ட்', 'ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்டர்' போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். 60 வயதான அவர், ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு "வீடா கோய் ஃபில்ஜி" என்ற இத்தாலிய தொலைக்காட்சித் தொடரின் மூலம் மோனிகா தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். 1992-இல் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலாவின் "பிராம் ஸ்டோக்கர்ஸ் டிராகுலா" திரைப்படத்தில் டிராகுலாவின் மனைவிகளில் ஒருவராக நடித்ததன் மூலம் உலகளவில் அறியப்பட்டார்.
இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கும் இவர், டேவிட் டி டொனாடெல்லோ, குளோபோ டி'ஓரோ மற்றும் நாஸ்ட்ரோ டி'அர்ஜென்டோ போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இத்தாலி இவரை இத்தாலியின் மிகவும் வெற்றிகரமான 100 பெண்களில் ஒருவராக அறிவித்தது.
தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ரஜினியின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'பவர் ஹவுஸ்' பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். ர கெட்ட பையன் டா', 'பத்த வெச்சிட்டயே பரட்ட' என முந்தைய ரஜினியின் முந்தைய வசனங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications