என் கூட கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர் பீலா வெங்கடேசன் - அன்புமணி ராமதாஸ் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்டேசன் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். பீலா வெங்கடேசனும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இந்நிலையில், பீலா வெங்கடேசன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55). கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக செயல்பட்டவர். பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பீலா வெங்கடேசன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வகுப்புத் தோழர்
இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு எரிசக்தித் துறை செயலாளராக பணியாற்றி வந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மருத்துவர் பீலா வெங்கடேசன் அவரது பதவிக் காலத்தில் வகித்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்தவர். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் எனது வகுப்புத் தோழர். நல்ல நண்பர். கல்லூரிக் காலங்களில் இருந்தே எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர். தமிழக அரசு நிர்வாகத்தில் உயர்பதவிகளுக்கு வந்திருக்க வேண்டியவர் இளம் வயதில் காலமானது வருத்தமளிக்கிறது.
அன்புமணி இரங்கல்
இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பீலா வெங்கடேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications