கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் அதிகரிப்பு.. ஜஸ்ட் 4 மாசத்தில் அபாரம்.. தங்க நகைக் கடனில் நன்மைகள்
சென்னை: தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைகளுக்கு எளிதாக கடன்கள் வழங்கப்படுகின்றன.. அதனாலேயே அவசரத்தேவைக்கு பலரும் கூட்டுறவு சங்கங்களை நாடி தங்களுக்கு வேண்டிய தங்க நகைக் கடனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில், நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நமக்கு அவசர தேவைக்கு பணம் வேண்டுமென்றால், வங்கிகளில் கடன் வாங்கும் முறை உள்ளது. ஆனால், கடன் வாங்குதில் வட்டி விகிதம் எவ்வளவு என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது..

தங்க நகைக்கடன்
வங்கியில் தனிநபர் கடன், தொழில் கடன், கல்விக்கடன், சொத்து மீதான அடமானக் கடன், வாகனக் கடன், தங்க நகைக்கடன் மற்றும் பல்வேறு பெயர்களில் கடன் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில் அவசர தேவைக்கு மிகச்சிறந்தது தங்க நகைக் கடன் தான். காரணம், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் போன்ற சில கடன்களைப் பெற வேண்டுமானால், அதற்கு சில ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. இதனால் கடன் கிடைக்க சற்று தாமதமாகும்.
ஆனால், தங்க நகைக்கடனை வாங்க பெரிதாக ஃபார்மாலிட்டிகள் கிடையாது.. ஒரு நாளிலேயே கடன் கிடைத்துவிடும்.. எனவேதான், தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கு வெகு விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்
மற்ற கடன்களை விடவும் தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாகும். ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப வட்டி விகிதம் மாறினாலும், அந்தந்த வங்கிகளில் வட்டி விகிதம் இந்தக் கடனுக்குத் தான் குறைவாக இருக்கும்.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில், தங்க நகை அடமானம் பேரில், நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில், கிராம் தங்கத்துக்கு, 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. அதனால்தான் பலரும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நகைக் கடன் வாங்க மக்கள் ஆர்வம்
நம்முடைய தமிழகத்தில், கடந்த 2024 - 25ல், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய் நகை கடன்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, அடமானம் வைக்கும் தங்க நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை, வாடிக்கையாளர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றது.
மேலும், "ரிசர்வ் வங்கி விதிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது; எவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்தாலும், அதற்கு ஏற்ப நகை கடன் வழங்கப்படும்" என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதனால், கூட்டுறவு வங்கிகள், சங்கங்களின் நகை கடன் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரூ.25,000 கோடி நகைக்கடன்
அந்தவகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 17 லட்சம் பேருக்கு, 170 கோடி ரூபாய்க்கு நகை கடன்கள் வழங்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை, 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.. கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 70.28 லட்சம் பேருக்கு, 62,001 கோடி ரூபாய்க்கு, நகைக் கடன்களும் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 4 மாதங்களில் 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது
வட்டி குறைவு அலைச்சல் இல்லை
இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "தனியார் வங்கிகள், அடகு நிறுவனங்களுக்கு இணையாக, கூட்டுறவு வங்கிகளிலும், தங்க நகை அடமானத்திற்கு, அதிக தொகை கடன் வழங்கப்படுகிறது.
எங்கும் அலைய வேண்டியதில்லை என்பதாலும், விரைவான அணுகலை பெற முடியும் என்பதாலும் பலரும் தங்க நகைக் கடனை தேர்ந்தெடுக்கின்றனர். வங்கியில் நகைகள் பத்திரமாக இருக்கும். வங்கிகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து, நகைகள் திருடு போனாலும், நகைகளை மீட்டெடுக்க காப்பீடு வசதி இருக்கிறது.
குறைந்த வட்டி வசூலிக்கப்படுவதால், ஏற்கனவே வாங்கியவர்களுடன், புதிய வாடிக்கையாளர்களும், அதிக அளவில் நகைக்கடன் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்" என்கின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications