பொன்மகன் சேமிப்பு திட்டம் பலன்! யார் சேரலாம்? ஆண் குழந்தைகளுக்கான பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டம்
சென்னை: பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இதன் முதிர்வுக்காலம் மற்றும் பிற சலுகைகள் என்னென்ன? பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் என்ற போஸ்ட் ஆபீஸ் மூலம்தான் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் யார் யாரெல்லாம் இணையலாம்? என்பது குறித்தெல்லாம் அஞ்சலக அதிகாரி தரப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தமிழக அரசு எத்தனையோ சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருவது செல்வ மகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸ் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, ஆண் குழந்தைகளுக்கும் ஒரு திட்டம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்..

அதன்படியே ஆண் குழந்தைகளின் நலனுக்காகவே, ஒரு தனித்துவமான சேமிப்பு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் (Ponmagan Podhuvaippu Nidhi Scheme) ஆண் குழந்தைகளின் நலனுக்காக கடந்த 2015, செப்டம்பர் 4-ல் தமிழக அரசு ஆரம்பித்து வைத்துள்ள சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தை செல்வமகன் திட்டம் என்றும் சொல்வார்கள்.
வட்டி விகிதம்
ஆரம்பித்த நாளிலிருந்தே இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆண் குழந்தைகளின் படிப்பை தொடர நிதி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முதன்மையான நோக்கத்தை இந்த திட்டம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தில், 9.70% நிலையான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது, இது மற்ற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாகும்.. இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் வருடாந்திர வைப்பு தொகை குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை இருக்கலாம். வைப்பு தொகையை மொத்தமாகவோ அல்லது மாதா மாதமும் செலுத்தலாம் ஒவ்வொரு நிதிக் காலாண்டு அதாவது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.
பொன்மகன் திட்டத்தில் இணைய தகுதிகள்
10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்... 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை துவங்கலாம்.
குறைந்தபட்ச வயது வரம்பு ஆண் குழந்தைகளுக்கு இல்லை. எனினும், NRI என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. இந்த திட்டத்தில் இணைய வயது வரம்பு, கல்வி தகுதி தேவையில்லை.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதில் இணையலாம்.
அப்படி இணைந்துவிட்டால், உங்களது அக்கவுண்டை தமிழகம் முழுவதும் அல்லது இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன்பாக அக்கவுண்ட் துவங்கியதிலிருந்து 7வது ஆண்டில் 50 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு முற்றிலும் வரி கிடையாது. முதலீடு செய்யும் ரூ. 1.5 லட்சத்திற்கு வரி கிடையாது.
பொன்மகன் திட்டத்தில் வசதிகள்
திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்களாகும்.. தேவைப்பட்டால், கூடுதலாக 5 வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால், முதிர்ச்சியடைந்த 1 வருடத்திற்குள் அதை செய்துவிட வேண்டும். முதலீட்டு தொகை மற்றும் அதற்கான வட்டி அனைத்தும் முதிர்வு காலம் முடிந்த பிறகு, குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்து இருந்தால் அந்த குழந்தையிடமே வழங்கப்படும்.
பணம் செலுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்தால், இறந்துவிட்டால், 18 வயதை பூர்த்தியடைந்திருக்கும் பட்சத்தில், குழந்தைக்குப் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அவரது பாதுகாவலர் பணத்தைப் பெறலாம்.
இதில், கடன் பெறும் வசதியும் உண்டு.. ஆனால், அதற்கு கணக்கு துவங்கப்பட்டு, 3-வது நிதியாண்டு தொடங்கியிருக்க வேண்டும். 2வது நிதியாண்டு முடிவிலுள்ள தொகையின் 25 சதவீதம் மட்டுமே கடன் பெற முடியும். அந்த கடனையும் 36 மாதங்களுக்கு முன்பு அடைத்துவிட்டால், 1 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். அதற்கு மேல் 6 சதவீதம் வட்டி வரலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் எடுக்க முடியும்.
எங்கே கணக்கை ஆரம்பிக்கலாம்
தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை ஆரம்பித்து கொள்ளலாம். இன்டர்நெட் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற ஆப் மூலமும் ஆன்லைனில் பணம் கட்டிக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்தாலே, இந்த திட்டத்தில் இணையலாம்.
ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோர்/பாதுகாவலரின் அடையாள சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி, ஆதார் கார்ட், பான் கார்டு, புகைப்படம் உள்ளிட்டவை ஆவணங்களாக தேவைப்படும். டெபாசிட் ரூ.500 செலுத்தினால், குழந்தையின் பாஸ்புக் தந்துவிடுவார்கள்.
மத்திய நிதியமைச்சகத்தால் மாற்றப்படும் வட்டி விகிதங்களை, அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலோ (Post Office Saving Schemes (indiapost.gov.in) தெரிந்துகொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications