பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ஆண் குழந்தைகள் 500 கட்டினால் ரூ.1.82 லட்சம்? அஞ்சலக பொன் மகன் வைப்புநிதி
சென்னை: பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசு எத்தனையோ சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து திறன்பட நடத்தி வருகிறது.. இதில் வாடிக்கையாளர்கள் பலன்களையும் பெற்று வருகிறார்கள். அந்தவகையில், ஆண் குழந்தைகளுக்கும் ஒரு ஒரு தனித்துவமான சேமிப்பு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.. அதன்பெயர்தான் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டமாகும்.. (Ponmagan Podhuvaippu Nidhi Scheme). இந்த திட்டத்தின் பலன்கள், செயல்பாடுகள் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தமிழக அரசு துவங்கிய திட்டம் தான், பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ஆண் குழந்தைகளுக்காக உள்ள ஒரே சேமிப்பு திட்டம் இதுவாகும்.. பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் போல இந்த திட்டம் ஆண் குழந்தைகளுக்கானது.. எனவே, இதனை செல்வமகன் திட்டம் என்றும் அழைப்பார்கள்.

டெபாசிட் தொகை
பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆண் குழந்தைகளின் படிப்பை தொடர நிதி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதால், அப்போதிருந்தே பெரும் வரவேற்பு பெற்றோர்களிடம் கிடைத்து வருகிறது.. இதற்கு 9.7 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இந்த வட்டி விகிதம் வருடா வருடம் மாறுபடக்கூடியது.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் வருடாந்திர வைப்பு தொகை குறைந்தபட்சம் ரூ.500, அதிகபட்சம் ரூ.1,50,000 வரை இருக்கலாம். இந்த டெபாசிட் பணத்தை மொத்தமாகவும், மாதா மாதமும் என உங்கள் விருப்பப்படி கட்டலாம்..
திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்களாகும்.. வேண்டுமானால் கூடுதலாக 5 வருடத்தை நீட்டித்து கொள்ளலாம். ஆனால், முதிர்ச்சியடைந்த 1 வருடத்திற்குள் அதை செய்துவிட வேண்டும். முதலீட்டு தொகை மற்றும் அதற்கான வட்டி அனைத்தும் முதிர்வு காலம் முடிந்த பிறகு, குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்து இருந்தால் அந்த குழந்தையிடமே வழங்கப்படும்.
ஒருவேளை குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டால், அக்குழந்தை 18 வயதை நிறைவு செய்திருந்தால், குழந்தைக்கு நேரடியாக பணம் கிடைக்கும். இல்லாவிடின், அந்த பணத்தை பாதுகாவலர் பெறுவார்.
வட்டி விகிதம்
சேமிப்பு தொடங்கி 7வது வருடத்தில் 50 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் ரூ. 1.5 லட்சத்திற்கு வரி கிடையாது.
இதில், கடன் பெறும் வசதியும் உண்டு.. ஆனால், சேமிப்பை துவங்கி 3 வருடங்களாவது நிறைவடைந்திருக்க வேண்டும்.. ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் எடுக்க முடியும்.
தபால் நிலையத்தில் இந்த திட்டத்தை ஆரம்பித்து கொள்ளலாம். இன்டர்நெட் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற ஆப் மூலமும் ஆன்லைனில் பணம் கட்டிக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்தாலே, இந்த திட்டத்தில் இணையலாம்.
யார் யார் இதில் இணையலாம்
என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டம் பொருந்தாது. மற்றபடி 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) இந்த திட்டத்தில் இணையலாம்.. 10 வயதை பூர்த்தி செய்திருந்தால்., ஆண் குழந்தை தானாகவே பொன் மகன் சேமிப்பை ஆரம்பிக்கலாம்.. குறைந்தபட்ச வயது வரம்பு ஆண் குழந்தைகளுக்கு இல்லை.
பிறப்பு சான்றிதழ்
ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், குழந்தையின் போட்டோ, பெற்றோர்/பாதுகாவலரின் ஆதார், பான், முகவரி சான்றிதழ்கள் தேவைப்படும்.. இந்தியா முழுவதும் எந்த அஞ்சலகத்திற்கும் இந்தக் கணக்கை மாற்றிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் மாதம் ரூபாய் 500 செலுத்தும் ஒரு நபர் மொத்த முதிர்வு காலத்தின் இறுதியில் ரூபாய் 1.83 லட்சம் தொகையினை பெற முடியும்.. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடங்கள் என்றாலும், அடுத்த 5 வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்து கொள்ளலாம்.
அதாவது, முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 வருடங்கள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது இந்த திட்டத்தின் கூடுதல் அம்சமாகும். ஆண் குழந்தை வளர்ந்து மேஜர் ஆனதுமே, சம்பாதித்த வட்டி உட்பட முழுத்தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications