Beware of the BJP- டிரெண்டிங்கில் திமுக ஐடி விங் வெளியிட்ட 'மணிப்பூர் Files’ ஆவணப் படம்!
சென்னை: மணிப்பூர் இன வன்முறைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தாமல் இருப்பதை விமர்சித்து தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 'மணிப்பூர் Files' என்ற பெயரில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தி காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் அவலத்தை பற்றி பேசியது. அதேநேர்த்தில் பக்க சார்புடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சையையும் எதிர்கொண்டது. இன்றளவும் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் விவாதத்துக்குரியதாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரளாவை மையமாக கொண்டு திரையிடப்பட்டது. இதுவும் மிகப் பெரும் சர்ச்சையானது. பல மாநிலங்களில் இந்தப் படத்தை திரையிட முடியாத நிலைமை உருவானது. இந்து பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பாட்டு வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக்கப்படுவதாக சொன்னது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்.
இந்த அரசியல் தாக்கத்தைப் பின்பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக DMK Files எனும் பெயரில் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். இவற்றை திமுகவுக்கு எதிரான ஊழல் விவரங்கள் என்கிறார் அண்ணாமலை. ஆனால் தேர்தல் ஆணையத்தின் வேட்புமனுத் தகவல்களை மட்டுமே அண்ணாமலை வெளியிடுகிறார் என்கிறது திமுக. இது தொடர்பான வழக்குகளும் அண்ணாமலை மீது பாய்ந்துள்ளன.

இப்போது தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஐடிவிங், பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் மணிப்பூர் Files எனும் பெயரில் ஒரு ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், eware of the BJP! மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கி பல நூறு உயிர்களை பலி கொண்ட பிறகும் இரத்த வெறி அடங்காமல் அலைகிறது பிஜேபி எனும் கொலைக்கருவி! #ManipurViolence என பதிவிட்டு இந்த ஆவணப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தின் அடிப்படை புவியியல், மக்கள் வாழ்வு; மணிப்பூர் வன்முறைக்கு என்ன காரணம்? மணிப்பூர் மாநில அரசியல் போக்கு, மணிப்பூர் வன்முறையில் மத்திய பாஜக அரசின் மவுனம் என 5 நிமிடங்களில் பல தகவல்களை உள்ளடக்கியதான குறும்படமாக மணிப்பூர் Files ஆவணப் படத்தை திமுக ஐடிவிங் உருவாக்கி இருக்கிறது. இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி இருக்கிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications