விஜய்க்கு மட்டுமல்ல.. அதிமுகவுக்கும் இன்று அக்னி பரிட்சை! சி.வி.சண்முகம் டீமுக்கு இதுதான் ஆப்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதேநேரம் அதிமுகவில் சி.வி.சண்முகம் தலைமையிலான டீம் விஜய்க்கு ஆதரவு செய்திருக்கிறது. இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறினால், சி.வி.சண்முகத்தின் டீம் மொத்தமும் காலி என அதிமுக தலைமை வார்னிங் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இன்று விஜய்க்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் அக்னி பரிட்சைதான்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய மேஜிக்கை நடத்தி காட்டியிருக்கிறார். ஏறத்தாழ 35% வாக்குகளை பெற்று 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

Vijay

கூட்டணி ஆட்சி

எனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5), சிபிஎம்(2), சிபிஐ(2), விசிக(2), ஐயுஎம்எல்(2) கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால், தற்போது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். எல்லாம் ஓகேதான், ஆனால் இதே பெரும்பான்மையை சட்டமன்றத்திலும் நிரூபிக்க வேண்டும். எனவே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் 118 எம்எல்ஏக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும்.

விஜய்க்கு சிக்கல்

கூட்டணி ஆதரவு இருப்பதால் விஜய் ஜெயித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார். இருப்பினும் திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என நீதிமன்றம் சொல்லியிருப்பதாலும், ஏற்கெனவே விஜய் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்திருப்பதாலும், வாக்கெடுப்பில் என்ன குளறுபடி நடக்கப்போகிறது என அச்சத்தில் இருக்கிறார்.

எடப்பாடியாருக்கு சிக்கல்

மறுபுறம் அப்படியே அதிமுக பக்கம் வந்தால், எடப்பாடி பழனிசாமிக்கும் கிலி ஏற்பட்டிருக்கிறது. காரணம் அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர், சி.வி.சண்முகம் தலைமையில் விஜய்யை சந்தித்த ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். விஜய்க்கு ஆதரவு கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன பின்னரும் இப்படி ஒரு டீம் பிரிந்த சென்றிருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற கிலி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டமன்ற விவகாரத்தை பொருத்தவரை, அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்குதான் எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைதான் கொறடாவாக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், எனவே அவர் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று கூறியிருப்பதால் அதை அதிமுக எம்எல்ஏக்கள் மதிக்க வேண்டும் என்றும் கட்சி தலைமை கூறியிருக்கிறது. மீறி தவெகவுக்கு சப்போர்ட் செய்தால், கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்தி எம்எல்ஏ பதவியை பிடுங்கிவிடுவொம் என்றும் எச்சரித்துள்ளது.

அக்னி பரிட்சை

சட்டப்படி பார்த்தால், ஒரு கட்சியில் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறு கட்சியில் இணைந்தால் அவர்கள் மீது கட்சி தாவல் சட்டம் பொருந்தாது. சி.வி.சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அதிமுக இந்த தேர்தலில் 47 தொகுதிகளில் ஜெயித்திருக்கிறது. 47ல் 3ல் 2 பங்கு எனில், 32 வருகிறது. 32 எம்எல்ஏக்கள் தவெக பக்கம் சாய்ந்தால் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது. எனவே இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு விஜய்க்கு மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமிக்கும் அக்னி பரிட்சைதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+