சசிகலா அதிமுகவில் இணைவாரா என்பது த்ரில்லராக இருக்கு.. அதிமுகவை மீண்டும் சீண்டிய பாஜக பாக்யராஜ்
சென்னை: சசிகலா அதிமுகவில் இணைவாரா மாட்டாரா உள்பட நாட்டில் நிறைய பிரச்சினைகள் த்ரில்லிங்காகவே இருக்கிறது என இயக்குநரும் பாஜக பிரமுகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரியா தி ஹான்டட் ஹவுஸ் எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்றார். பழைய இருட்டுபாளையம் எனும் ஊரில் பேய் வீடு இருக்கிறது. இது ஊர்மக்களை திகிலில் இருக்க வைத்தது.
இந்த படம் ஒரு காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். இந்த படத்தில் பாண்டியராஜன், வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். த்ரில்லுக்கும் திகிலுக்கும் இடையே காமெடி சரவெடியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாக்யராஜ்
இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில், படம் மட்டுமில்லைங்க, நாட்டோட சூழ்நிலையும் ரொம்ப த்ரில்லிங்காதான் இருக்கு. அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார், எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்ய போகிறார், இருவரும் சேர்வார்களா மாட்டார்களா என்ற த்ரில்லர் ஓடி கொண்டிருக்கிறது.

சசிகலா
சசிகலா அதிமுகவில் இணைவாரா, அவர் இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பாரா என்பதெல்லாம் த்ரில்லிங்காக இருக்கிறது. எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் என்ன செய்ய போகிறார், அணி சேர்த்துக் கொள்ள போகிறாரா, போட்டியிடுகிறாரா இல்லை என்பது த்ரில்லிங்காகவே இருக்கிறது.

நகைச்சுவை
இப்படியாக நாட்டில் நிறைய பிரச்சினைகள் த்ரில்லிங்காவே உள்ளது என பாக்யராஜ் நகைச்சுவையாக கடந்த ஜூன் மாதம் பாக்யராஜ் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி உடைந்துவிடக் கூடாது. கட்சியை உடைப்பதை விட மறுபடியும் பொதுக் குழுவுக்கு ஏற்பாடு செய்து அந்த குழுவில் இருவரும் தேர்தலில் நின்று யாருக்கு ஓட்டு விழுதோ அவர்களுக்கு கட்டுப்பட்டு போவதுதான் கட்சிக்கு நல்லது.

எம்ஜிஆர் மக்கள்
எம்ஜிஆர் மக்களுக்காகவே கஷ்டப்பட்டு தொடங்கி கட்சி. அது வீணாக போக கூடாது. இவர்களுக்கு நடுவில் சசிகலா வேறு. முடிந்தால் அவரையும் ஆட்டத்திற்கு சேர்த்து கோங்க. இவங்க எல்லாம் வரதுக்கு காரணமாக இருந்த அவங்க மட்டும் என்ன பண்ணாங்க என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் தற்போது பாஜகவில் உறுப்பினராக உள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications