கொரோனா.. செங்கல்பட்டில் வேக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் விருப்பம்.. விரைவில் அனுமதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டில் வேக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் முன் வந்து இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஏற்கனவே இந்த மாத தொடக்கத்திலேயே கொரோனா மூன்றாம் அலை பரவல் ஏற்பட்டுவிட்டதாகவும், இனிமேல்தான் கேஸ்கள் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியாவில் வேக்சின் தேவையும் அதிகரித்துள்ளது. வேக்சின் தேவை என்னதான் உயர்ந்தாலும் கூட வேக்சின் உற்பத்தி இன்னும் உயரவில்லை. பல மாநிலங்களில் வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வேக்சின் தட்டுப்பாடு

வேக்சின் தட்டுப்பாடு

நேற்று டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேக்சின் முகாம்கள் மூடப்பட்டன. போதிய வேக்சின் வரத்து இன்றி வேக்சின் முகாம்கள் மூடப்பட்டன. இந்தியாவின் வேக்சின் தேவையை பூர்த்தி செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு வேக்சின் உற்பத்தி மையத்தை இயக்க வேண்டும் என்று முன்பே கோரிக்கை விடுத்து இருந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கோரிக்கை விடுத்து வருகிறார். முதலில் தமிழ்நாடே இங்கு அனுமதி பெற்று வேக்சின் உற்பத்தியை செய்ய முயன்றது. ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி தரவில்லை.

தனியார்

தனியார்

அப்போதே முதல்வர் ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் இந்த மையம் குறித்து ஆலோசனை செய்தார். எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சினை உற்பத்தி செய்ய முடியுமா என்று கோரிக்கை வைத்தார். இந்த மீட்டிங்கிற்கு மறுநாளே அந்த வேக்சின் மையத்தை பாரத் பயோடெக் நிறுவனம் நேரில் சென்று ஆய்வு செய்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இதில் மத்திய அரசு துரிதமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த நிலையில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் வெளிப்படையாக இங்கு வேக்சின் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் பேசி உள்ளது. இன்னும் 2 நிறுவனங்கள் இங்கு வேக்சின் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு வேக்சின் தயாரிக்க அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    உலகமே பாராட்டும் வகையில் முதல்வரின் ஆட்சி.. நடிகர் Vadivelu பாராட்டு
    வாய்ப்பு

    வாய்ப்பு

    இதனால் தமிழ்நாட்டில் வேக்சின் உற்பத்தி செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு தயாரிக்காமல் பாரத் பயோடெக் நிறுவனம் தனியாக அவர்களின் செலவில் தயாரிப்பு செய்யும். ஆனால் தமிழ்நாட்டில் வேக்சின் தயாரிக்கப்படுவதால் கூடுதல் வேக்சின்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+