பாரதி பாஸ்கருக்கு வந்த அந்த போன்.. "நான் சி.எம். பேசறேன்".. வெடித்து சிரித்த காமாட்சி.. என்ன நடந்தது
பாரதி பாஸ்கர், கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்
சென்னை: "நான் முதலமைச்சர் பேசறேன்" என்று சொன்னதுமே, நான் ஆச்சரியப்பட்டு போனேன், கலைஞரிடம் பெற்ற பண்பு இது" என்று பாரதிபாஸ்கர் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 99வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் வேருக்கு விழா கூட்டம் நடைபெற்றது.. இதில், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
அப்போது, இதில் பங்கேற்று புகழ்பெற்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உரையாற்றினார்.. அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.. பாரதி பாஸ்கர், விழாவில் கருணாநிதி குறித்து பேசியதன் சுருக்கம் இதுதான்:

கோபாலபுரம்
"என் வீடு கோபாலபுரத்தில் இருக்கிறது.. ஆனால் நான் கலைஞரை ஒருமுறை கூட சந்தித்து இல்லை.. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் நான் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.. மறுநாளே, ஒரு டாக்டர் போன் பேசிட்டே என்னிடம் ஓடிவந்தார்.. இந்தாங்க பேசு என்று போனை தந்தார்.. நான் ஹலோ என்றேன்.. 'நான்தான் முதலமைச்சர் பேசறேன்" என்றார் ஸ்டாலின்.. என்னால் நம்ப முடியவில்லை.. நான் அரசியல்வாதி இல்லை.. புகழ்பெற்ற நட்சத்திரமும் கிடையாது.. நான் ஒரு பேச்சாளர்.. அவ்வளவுதான்.. என்னை நலம்விசாரித்தபோது, நான் ஆச்சரியப்பட்டு போனேன்.. இந்த பண்பு கலைஞரிடம் இருந்து அவர் பெற்றது.

கேமராமேன்
ஒருமுறை தூர்தர்ஷனில் கலைஞர் பற்றி படம் எடுக்க போகிறார்கள்.. அதற்கு என் நண்பர்தான் கேமராமேன்.. கோபாலபுரம் சென்றார் அந்த கேமராமேன்.. அங்கே நின்றிருந்த ஸ்டாலின் சாரை காட்டி, :"ஐயா, நீங்க ஸ்டாலின் சாரை பார்த்து நடந்து வந்தால், படம் எடுக்க நல்லா இருக்கும்" என்றார்.. உடனே கலைஞர், ஸ்டாலின்சார்தான் என்னை பார்த்து நடந்து வரணும்.. நான் அவர பார்த்து நடக்ககூடாது என்று கிண்டலாக கூறினாராம்.

காமாட்சி
கலைஞர் ஒரு பேச்சாளராக பேசுகிறபோது, விஞ்ஞான விதியையும் விஞ்சி நிற்பார்.. ஏன் என்றால், ஒரு பந்து அவரிடம் வீசப்பட்டால், வீசப்பட்ட அது வேகத்தை விட, கூடுதல் வேகத்தில் பதில் வந்து சேரும்.. முதல்வராக கலைஞர் சட்டமன்றத்தில் இருக்கிறார் எதிர்க்கட்சி தலைவராக ஜி.காமாட்சி இருக்கிறார்.. அப்போது, காமாட்சி எழுந்து ஒரு கேள்வி கேட்கிறார்.. "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? எவ்வளவு வைர நகைகள் இருக்கிறது? என்று கேட்டார்.. உடனே கலைஞர் எழுந்து பதில் சொல்கிறார், "மீனாட்சிக்கு இருக்கிற சொத்துக்களை சொன்னால், காமாட்சிக்கு பொறாமை வந்துவிடும்" என்றாராம்.. இதைக்கேட்டு, காமாட்சி வெடித்து சிரித்துவிட்டார்.

ஐயா.. தேர்தல்
இப்படித்தான் ஒருமுறை, பக்தவத்சலம் சட்டமன்றத்தில் ஆளும் கட்சியில் இருந்தார்.. அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.. அப்போது எழுந்து பேசிய பக்தவத்சலம், "ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் இல்லையே என்ற கவலை மட்டும்தான் எனக்கு இருக்கிறது என்றாராம்.. உடனே கலைஞர், .. "ஐயா.. 67-ல் தேர்தல் வருகிறது.. அது வந்தபிறகு உங்கள் கவலை தீர்ந்துவிடும்.. ஏனென்றால், அப்போது ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக நீங்களே இருப்பீர்கள்" என்றாராம்.. இதைக் கேட்டு பக்தவத்சலம் மகிழ்ந்து சிரித்தாராம்..

சிதம்பரம் - நடராஜன்
என் நண்பர் பெயர் இலக்கிய நடராஜன்.. அவர் கலைஞரிடம் பணி செய்து கொண்டிருந்தார்.. பிறகு, ப.சிதம்பரத்திடம் பணியாற்ற வாய்ப்பு வந்தது.. எனவே, இதை கலைஞரிடம் சொல்லிவிட்டு போவற்காக வருகிறார்.. இங்கிருந்து இன்னொரு தலைவரிடம் பணிபுரிய போவதை கலைஞரிடம் எப்படி சொல்வது என்று தயங்குகிறார்.. பதட்டமாக வருகிறார்.. "ஐயா, நான் சிதம்பரத்திடம் வேலை செய்யலாம்னு இருக்கேன் என்றாராம்.. அதற்கு கலைஞர் ஒருநொடிகூட தயங்காமல், "நடராஜன் சிதம்பரத்திடம்தானே இருக்க வேண்டும்" என்றாராம்.. இதெல்லாம் கலைஞரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு" என்று பாரதி பாஸ்கர் பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications