இலவசமாக என்ஜினியரிங் படிக்கலாம்.. சூப்பர் சான்ஸ்.. ஏர்டெல் ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பார்தி ஏர்டெல், மாணவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்கும் வகையில் ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இலவசமாக உயர்கல்வி படிக்க தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி என இங்கே பார்க்கலாம்.
பார்தி எண்டர்பிரைசஸின் கல்விச் சேவை பிரிவான பார்தி ஏர்டெல் அறக்கட்டளை, ஐ.ஐ.டிகள் உட்பட 50 தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எஃப்) பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்களை (5 ஆண்டுகள் வரை) படிக்கும் பல்வேறு சமூக பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் தகுதி மற்றும் பொருள் அடிப்படையிலான உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது. 'பாரதி ஏர்டெல் ஸ்காலர்ஷிப் திட்டம்' முக்கியமாக ஏழை மாணவ மாணவிகளை மையமாகக் கொண்டது. இந்த ஆண்டு 250 மாணவர்களுடன் தொடங்கும் இந்த உதவித்தொகை, ஆகஸ்ட் 2024 இல் சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களுக்குப் பொருந்தும்.
ஏர்டெல்லின் கல்வி உதவித்தொகை திட்டம் அதன் உச்சத்தை எட்டும்போது ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் 4,000 மாணவர்களுக்குச் சென்றடைவதே லட்சியம் என்று ஏர்டெல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
100% அதாவது முழு நிதியுதவியுடன் கூடிய கல்வி உதவித்தொகையானது, திறமையான மாணவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு, தரமான கல்வியைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் நிதித் தடைகளைக் களைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் முழு கல்வி கட்டணத்தையும் நிதி உதவியாகப் பெறுவதோடு, தங்கும் விடுதி, மெஸ் கட்டணமும் வழங்கப்படும்.
தகுதிகள்: பார்தி ஏர்டெல் ஸ்காலர்ஷிப்கள் என்.ஐ.ஆர்.எஃப் (பொறியியல்) தரவரிசையில் முதல் 50 இடங்களில் உள்ள கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலிகாம், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (AI, IoT, AR/VR, Machine Learning, Robotics) ஆகிய துறைகளில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த நிதி உதவியைப் பெற தகுதியானவர்கள்.
குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 8.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு உதவித்தொகை, மானியங்களைப் பெறுபவர்களாக இருக்கக்கூடாது.
இந்த உதவித்தொகையைப் பெறுபவர்கள் 'பாரதி அறிஞர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் படிப்புக் காலம் முழுவதும் கல்லூரிக் கட்டணத்தில் 100 சதவீதத்தைப் பெறுவதோடு மடிக்கணினியும் வழங்கப்படும். கூடுதலாக, அதற்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுதி மற்றும் மெஸ் கட்டணம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமுள்ள மாணவர்கள் https://bhartifoundation.org/bharti-airtel-scholarship/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மின்னஞ்சல்/ மொபைல் எண் பயன்படுத்தி பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, விவரங்களை நிரப்பி ஆவணங்களைப் பதிவேற்றவும்.
ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளச் சான்று, நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான கடிதம், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வருமான வரிச் சான்றிதழ், கல்லூரி கல்வி மற்றும் விடுதி கட்டண விவரங்கள், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள், கல்லூரியின் வங்கி கணக்கு விவரங்கள், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications