இளையராஜா மாமாவுக்கு கொடூரம்! அக்கா இருந்திருந்தால் பவதாரணிக்கு இப்படி ஆகியிருக்குமா? அழுத தாய்மாமன்
சென்னை: பவதாரணியின் கடைசி கட்டம், எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டார்களா என நம்பிக்கையோடு இருந்த நிலையில் அவருடைய உடல் மட்டும்தான் எங்கள் வீடு வந்தது என கண்ணீருடன் அவருடைய தாய்மாமாவும் விலாசினியின் அப்பாவுமான மூர்த்தி தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி 1976 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தனது 12 ஆவது வயது முதலே திரைத் துறையில் பாடி வந்தார். தனது தந்தை இளையராஜா, சகோதரர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ளார்.

அவரது மஸ்தானா மஸ்தானா என்ற பாடல் பவதாரிணிக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவருடைய இறப்பால் இளையராஜாவின் குடும்பத்தினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் பவதாரணியின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது தாய்மாமா மூர்த்தி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பாடகியும் சீரியல் நடிகை விலாசினியின் தந்தையுமாவார். முதலில் பவதாரணிக்கு இப்படி ஒரு புற்றுநோய் இருப்பதே நெருங்கிய உறவினர்களுக்கு கூட தெரியாது.
எனது அக்கா கணவர் இளையராஜாவும் மாப்பிள்ளை யுவனும் தங்கள் பணிகளில் பிஸியாக இருந்தனர். அதனால் அவர்களும் பவாவின் உடல் நிலையை கேட்டறியவில்லை. அது போல் பவதாரிணியும் அவருடைய உடல்நிலையை கவனித்துக் கொள்ளவில்லை. உண்மையில் எனது அக்கா ஜீவா இருந்திருந்தால் நிச்சயம் பவதாரிணியை இறக்க விட்டிருக்கமாட்டார்.
பவதாரிணியின் புற்றுநோய் 4ஆம் கட்டம் சென்ற பிறகுதான் எங்களுக்கு தெரியவந்தது. அப்போது பவதாரிணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். பவதாவின் கணவர் அழுததை என்னால் மறக்கவே முடியாது, அவருக்கு ஆறுதல் கூறவும் இயலவில்லை. எப்படியாவது ஒரு வழியில் பவதாவின் புற்றுநோயை குணப்படுத்திவிட மாட்டார்களா என நம்பிக்கையோடுதான் நாங்களும் இருந்தோம், மாமா, மாப்பிள்ளை, பவதா, அவருடைய கணவர் என அனைவரும் இருந்தோம். ஆனால் இலங்கையில் இருந்து அவருடைய உடல் மட்டுமே தமிழகத்திற்கு வந்தது. இவ்வாறு மூர்த்தி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
47 வயதான பவதாரிணி இத்தனை எளிதில் மண்ணுலகை விட்டு பிரிந்த நிலையில் அவருடைய இழப்பு குறித்து விலாசினி கூறியிருந்ததாவது: ஒரு மாதத்திற்கு முன்பு தான் பவதாரணி அக்காவுக்கு புற்றுநோய் இருப்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலும் அவர் 4 ஆவது நிலையில் இருக்கிறார் என்பதும் தெரியும்.
கடந்த மாதம் dehydration ஆகி மருத்துவமனையில் அனுமதித்ததாக சொன்னார்கள். நான் பவா அக்காவின் கணவருக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் உடனே அழ தொடங்கினார். என்னாச்சு மாமா ஏன் அழறீங்க என கேட்டதற்கு, உன் அக்காவை கடைசியாக வந்து பார்த்துவிட்டு செல் என்றார். என்னாச்சு என கேட்ட போதுதான் அவருக்கு 4ஆவது நிலை புற்றுநோய் இருக்கிறது என்றார்.
மேலும் பவாவிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். அவரை பார்க்கும் போது அழுகையை அடக்கிக் கொள் என்றார். எங்கள் உறவினர் ஒருவர் மருத்துவராக உள்ளார். அவரிடம் பவாவின் மருத்துவ அறிக்கைகளை வாங்கி கொண்டு போய் காண்பித்தோம். அவரும் 4ஆவது ஸ்டேஜில் இருப்பதால் அப்படியே விட்டுவிடுங்கள் என்றார்.
இதற்கு முன்பு கொலுவின் போது பவா அக்காவை பார்த்துவிட்டு நானும் என் அம்மாவும் பயந்துவிட்டோம். நாங்கள் கேட்டதற்கு டயட்டில் இருப்பதாக தெரிவித்தார். அந்த கொலுவில்தான் நான் கடைசியாக அவருடன் சேர்ந்து ராஜா சார் பாடிய பாடலை பாடினேன். ஜனவரி 18 ஆம் தேதி நான் அமெரிக்காவுக்கு சென்றேன். பவதா அக்கா அதற்கு முன்பே இலங்கைக்கு கிளம்பிவிட்டார்.
2020 ஆம் ஆண்டே பவதாவுக்கு பித்தப்பையில் ஏதோ பிரச்சினை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பித்தப்பையில் கல் இருப்பதாக சொல்லப்பட்டதா, இல்லை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்களா என தெரியவில்லை. என் அப்பாவை பார்த்ததும் அழுதார். கடந்த ஒன்றரை மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். கடைசியில் உடம்பில் நீரே இல்லை என்றுதான் அனுமதித்தார்கள். அப்போதுதான் அவருக்கு 4ஆவது ஸ்டேஜ் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு விலாசினி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications