அத்தனை பேர் பார்க்கும் போது.. நடிகையின் இடுப்பை தடவிய நடிகர்! கோபத்தில் நடிகை எடுத்த முடிவு!
சென்னை: பிரபல போஜ்புரி நடிகர் ஆன பவன் சிங் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சக நடிகையான அஞ்சலி ராகாவின் இடுப்பை தொட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சினிமா உலகில் இருந்தே விலகுவதாக நடிகை அஞ்சலி கூறியிருக்கும் நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக பவன் சிங் கூறி இருக்கிறார்.
இந்திய அளவில் பாலிவுட் கோலிவுட் போன்று போஜ்பூரி படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான போஜ்பூரி திரைப்படங்கள், திரையரங்குகளுக்கு வருவதும் போவதுமாக இருக்கின்றன. அதே நேரத்தில் அடிக்கடி போஜ்பூரி நடிகர்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அப்படித்தான் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் பவன் சிங். போஜ்பூரியில் 'சாயா சேவா கரே' உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்திருப்பவர். மொக்கையான சண்டை காட்சிகள் இருந்தாலும் கிராபிக்ஸில் பட்டையை கிளப்புவது பவன் சிங்கின் வழக்கம்.

போஜ்புரி சினிமா
இந்த நிலையில் சமீபத்தில் பவன் சிங்கும் நடிகை அஞ்சலி ராகா என்பவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், பட குழுவினர் பங்கேற்றிருந்தனர். அந்த விழாவில்தான் இந்த சர்ச்சை வெடித்திருக்கிறது.
போஜ்புரி நடிகர்
இந்நிகழ்ச்சியில் அஞ்சலி பேசிக் கொண்டிருந்த போது, திடீரென பவன் சிங் அவரது இடுப்பைத் தொட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தாலும், அஞ்சலி வெளியே சிரித்துக் கொண்டே மீண்டும் பேசினார். ஆனால், பவன் சிங் மீண்டும் அவரது இடுப்பில் கை வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அஞ்சலி அங்கிருந்து கிளம்பினார். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பவன் சிங்
இந்த நிலையில் நடிகர்கள் எப்போதும் இப்படித்தான், இதனால் சினிமா உலகில் இருந்தே வெளியேறுகிறேன் எனக் கூறி அதிர வைத்தார் அஞ்சலி. இதற்கிடையே மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகர் பவன் சிங்குக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை அடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தனது செயல் அஞ்சலியைப் பாதித்திருந்தால் மன்னித்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் பவன் சிங்.
மன்னிப்பு கேட்டார்
மேலும் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்யவில்லை எனவும், அவரது உடையில் பிரைஸ் டாக் இருப்பதாக நினைத்து அதனைத் தொட்டதாகவும், அஞ்சலி சங்கடப்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் பவன் சிங் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாகவும், தற்போது பிரச்சனை வந்ததால் சமாளிப்பதாகக் கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications