பள்ளிகளுக்கு பறந்த குட் நியூஸ்.. தமிழக அரசு அதிரடி.. இனி மாதந்தோறும் இது உண்டு.. சபாஷ் ஆக்ஷன்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட் நியூஸ் பிறப்பித்துள்ளார்
சென்னை: பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அக்கறையுடன் முன்னெடுத்து வருகிறது தமிழக அரசு.
அவ்வப்போது அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு, மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியிலும் நிம்மதியிலும் ஆழ்த்தி வருகிறது.

கட்டாயக்கல்வி
அந்த வகையில், பள்ளி மேலாண்மைக் குழு பற்றியும் ஒரு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளன.. அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவே, பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது... இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பள்ளி மேலாண்மைக் குழுவை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.

விழிப்புணர்வு
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது... இந்த கூட்டங்களில், பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலாண்மைக்குழு
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும், 2022ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, தக்கவைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்பு குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெள்ளிக்கிழமை
அதேபோல, பள்ளி மேலாண்மை குழு நடத்துவதற்கான வழிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. 2022-ம் ஆண்டு கல்வி ஆண்டில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், 50 சதவீத பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Recommended Video

அன்பில் மகேஷ்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை, தக்க வைத்தல் குழு, கற்றல் குழு, கட்டமைப்புக்குழு, மேலாண்மை குழு என துணைக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சியை பெற்றோர் தரப்பில் ஏற்படுத்தி வருகிறது.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications