சூப்பர்.. ஒரே ஒரு அறிவிப்பில் "சபாஷ்" வாங்கும் திமுக அரசு.. முன்னாடியே இதை செய்திருக்கலாமே.. அடிதூள்
சென்னை: ஒரே ஒரு அறிவிப்பை வெளியிட்டு, ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளி கொண்டிருக்கிறது திமுக அரசு.. அப்படி என்ன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அழுத்தமாக தெரிவித்திருந்தன.

அதிருப்தி: ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான், மரக்காணம் கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்பட்டு, திமுக அரசின் மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்தது.. உயிர்பலிகளுக்கு பிறகு, "பூரண மதுவிலக்கு தேவை" என்று வைகோ, திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களே வலியுறுத்த துவங்கிவிட்டனர்.. போதாக்குறைக்கு செந்தில் பாலாஜியின் "10 ரூபாய்" விமர்சனம் திமுக ஆட்சி மீதான விமர்சனத்தை அதிகரித்துவிட்டது.
வாபஸ்: இதற்கு நடுவில், 'சிறப்பு உரிமம் பெற்று திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்தலாம் என்று திமுக அரசு அறிவிப்பை வெளியிட, அதற்கு நாலாபுறமுமிருந்து எதிர்ப்புகள் கிளம்ப, சூட்டோடு சூடாக அந்த அறிவிப்பை அரசு திரும்ப பெற்றது வேறு விஷயம்.
எனினும், சமீபத்தில் அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தது அதிருப்தியை மீண்டும் தந்துவிட்டது.. "காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள்.. எனக்கு கோவம் வரும்.. குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதில், அவர்களுக்கு ஆலோசனை சொல்லுங்கள்.. கடுமையான பணிச்சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது, அவர்களை குடிக்காரர்கள் என்று விமர்சிக்காதீர்கள்.. ஜாலியாக குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதில் தவறில்லை" என்று முத்துசாமி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
பாமக அன்புமணி: குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை பற்றி கூறும்போது, "மதுவிலக்குத் துறை என்றால், எப்படியாவது மதுவின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதாகும். மக்கள் மத்தியில் மது பயன்பாட்டைக் குறைக்கும் வகையில்தான் மதுவிலக்குத் துறை செயல்பட வேண்டும். ஆனால், இது மது விற்பனைத் துறை என்று நினைத்துக் கொண்டுதான், அந்த துறைக்கு அமைச்சராக வருகிறார்கள் போல என்று எண்ணத் தோன்றுகிறது.
சமூக அக்கறை கொண்ட ஒருவர் மதுவிலக்குத் துறைக்கு பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால், அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்று அன்புமணி ராமதாஸ் அச்சம் தெரிவித்திருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.
அமைச்சர் சுப்பிரமணியன்: இப்படிப்பட்ட சூழலில்தான், சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், "குடி மற்றும் போதை பழக்க பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் முறையிலும், மனோதத்துவ முறையிலும், மருத்துவ முறை சிகிச்சையுடன் கூடிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும்.
அது மட்டுமில்லாமல், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு 15 நாட்கள் அவர்கள் பகுதியிலேயே தங்கி இருந்து சிகிச்சை வழங்கப்படும். குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட பிறகு வேலைக்கான தகுதி இருந்தால், அரசு பணியில் கல்வி தகுதிக்கு ஏற்ப அவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள்" என்று கூறியிருந்தார். குடியை நிறுத்தினால் அரசு வேலை என்று அமைச்சர் அறிவிக்கவும், இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
முத்துசாமி அதிரடி: இந்நிலையில், டாஸ்மாக் விவகாரத்தில் சர்ச்சைகளுக்கு ஆளான, அமைச்சர் முத்துசாமியே ஒரு அதிரடியை தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அமைச்சர் முத்துசாமி கூறியபோது, "டாஸ்மாக் துறையின் சார்பில் ஆய்வு செய்து 55 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகள் அவர்கள் கேட்ட வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 3 ஆயிரம் கடைகளில்கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும், 500 கடைகளில் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து, அடுத்த கூட்டத்தில் பேசவிருக்கிறோம்.. மதுபானங்களுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்கக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளோம்..
சிறிய வயதினர், முதல்முறையாக கடைக்கு வருவோரை கண்டறிந்து, அவர்களிடம் பேசி குடிப் பழக்கத்தை தடுக்கவும் ஊழியர்களை அறிவுறுத்தியிருக்கிறோம். அதுபோன்ற நபர்களின் பெயர், செல்போன் நம்பர் பெற்று தந்தால், அவர்களுக்கு தனி கவுன்சிலிங் அளிக்கப்படும். இப்படி, அதிக அளவிலானோர் திருந்த ஏற்பாடு செய்தவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, கவுரவிக்கப்படுவார்கள்" என்றார்.
மெல்ல விலகும் அதிருப்திகள்: மது குடிப்போரை திருத்தினால் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளது, மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அத்துடன், டாஸ்மாக் விவகாரத்தில், திமுக அரசு மீதான அதிருப்திகளும் மெல்ல உடைந்து கீழே விழ ஆரம்பித்துள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications