பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அதிரடி.. கண்டக்டர்களுக்கு பறந்த உத்தரவு.. சபாஷ்
தமிழக அரசு பஸ் கண்டக்டர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை: தமிழக பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. இதையடுத்து, புது புது அறிவிப்புகளை மக்கள் நலன் கருதி வெளியிட்டும் வருகிறது.
தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெண்களுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது..

தமிழக அரசு
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பிங்க் கலர் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது... அதற்கான பணியும் ஆரம்பமாகி விட்டது. அதேபோல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

நடவடிக்கை
8 அல்லது 9 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து விரைவாக புதிய பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் உறுதி கூறியிருந்தார்.. இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, மற்றொரு அறிவிப்பை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இலவசம்
தமிழகத்தில் இலவச பஸ் பாஸ் மூலம் தினமும் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம் செய்து வருகின்றனர்... இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது... அத்துடன் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-2020 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை வைத்திருந்தால், நடத்துநர்கள் மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அரியலூர்
சமீபத்தில், அரியலூரில் ஒரு சம்பவம் நடந்தது.. பள்ளி மாணவிகளுக்கு பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதால், மாணவிகள் கொந்தளித்தனர்.. அப்போது, 'காசு கொடுத்து வர்றவங்க மட்டும்தான் சீட்டில் உட்கார வேண்டும், பஸ் பாஸ் வைத்து இருக்கும் மாணவ, மாணவிகள் நின்று கொண்டு வரவேண்டும்' என்று கண்டக்டர் கறாராக சொன்னார்.. அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆபாசமாகவும் திட்டினார்.. இது அத்தனையும் வீடியோவாக வெளிவந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications