மின்சார வாரியம் அதிரடி.. இந்த மாசம் கரண்ட் பில் கட்டிட்டீங்களா? வித்தியாச தொகை செலுத்த மெசேஜ் வந்ததா
சென்னை: மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்களையும் அவர்களின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வருகிறது. என்ன காரணம்?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்கட்டணங்களை ஆன்லைனிலேயே பெரும்பாலானோர் செலுத்தி வருகிறார்கள்.. மின் கட்டணத்தை மின் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும், ஆன்லைன் செயலி வாயிலாகவும் செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. ஆனால், இதை பயன்படுத்தி சில மோசடிகளும் துவங்கியிருக்கின்றன.

சமீபத்தில் மின் நுகர்வோர்களுக்கு, "உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்றிரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துங்கள்" என்று போலியான குறுஞ்செய்தி பரவியது.. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை பதிவிட்டிருந்தது.
மின்இணைப்பு: அதில், "நுகர்வோர்கள் ஜாக்கிரதை. தூண்டிலில் சிக்க வேண்டாம். இது மின்கட்டண மோசடியின் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்தபட்ச ரூ.03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர்.
பதற்றப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnebltd.gov.inமற்றும் செயலியில் சரிபார்க்கவும். எஸ்.எம்.எஸ். வாயிலாக வந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எஸ்.எம்.எஸ் வந்த எண்ணை அழைக்க வேண்டாம். இதுதொடர்பாக, சைபர் குற்ற எண 1930-ல் புகார் அளிக்கவும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு பிறகே இதுபோன்ற மோசடிகள் மெல்ல மெல்ல குறைய துவங்கியிருக்கிறது.
இணைப்புகள்: இதனிடையே, தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ந் தேதிக்கு வீட்டு -அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.
எனவே, மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ந் தேதியை அடிப்படையாக வைத்து, குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாச தொகை குறித்து, கஸ்டமர்களுக்கு SMS மெசேஜ் அனுப்பி வருகிறது..
குடியிருப்புகள்: அதில், "மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத்தெரிய வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த தகவலை, நுகா்வோா் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி அளவில் உள்ளது.. எனவே, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர். அந்தவகையில், நம் மாநிலத்தில் தற்போது தனிநபர் மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 1,792 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications