வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்போர்களுக்கு வரப்பிரசாதம்! தமிழகத்தில் முதல் முறையாக அரசின் அதிரடி கொள்கை
சென்னை: கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகவும், கால்நடைகளின் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. இந்நிலையில், பூர்வீக ஆடு வகை மற்றும் பன்றிகளை பாதுகாக்க, உற்பத்தியை பெருக்க, ஆடு இனப்பெருக்க கொள்கை மற்றும் பன்றி வளர்ப்பு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Livestock Breeding Policy அதாவது கால்நடை இனப்பெருக்க கொள்கை என்பது ஒரு மாநிலம் அல்லது நாட்டில் உள்ள கால்நடை வகைகளின் (மாடு, எருது, எருமை, ஆடு, செம்மறி ஆடு, கோழி போன்றவற்றின் தரத்தை உயர்த்தவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உள்ளூர் இனங்களை பாதுகாக்கவும் அரசு உருவாக்கும் வழிமுறைகள், விதிமுறைகள், திட்டங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.

கால்நடை இனப்பெருக்க கொள்கை
பால், மாமிசம், முட்டை போன்ற உற்பத்திகளை அதிகரிப்பதற்காக உயர்தர இனங்களை உருவாக்குதல், இதற்கெனவே சிறந்த கால்நடைகளை தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்தல், உற்பத்தி தரத்தை உயர்த்துதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்ல, எந்தெந்த உள்நாட்டு அல்லது வெளிநாட்டு இனங்களை கலப்பு இனப்பெருக்கம் செய்வது அல்லது எந்த உள்நாட்டு இனங்களை பாதுகாப்பது போன்றவை குறித்தெல்லாம் இதில்தான் முடிவெடுக்கப்படும். அதேபோல செயற்கை கருவூட்டல், தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் அல்லது இயற்கையான இனச்சேர்க்கை போன்ற இனப்பெருக்க முறைகளும் இதன்மூலம்தான் வரையறுக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இந்த கொள்கைகள் அந்தந்த பகுதியின் வேளாண் தட்பவெப்ப நிலை மற்றும் விவசாயிகளின் தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன.
பன்றிகளின் மரபணு திறன்
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, கால்நடை இனப்பெருக்கக் கொள்கை என்பது நாட்டு இனங்களின் மரபணுவை பாதுகாப்பதையும், அதே நேரத்தில் உற்பத்தியை அறிவியல் ரீதியாக உயர்த்துவதையும் உறுதி செய்கிறது.
பூர்வீக ஆடு வகைகளை பாதுகாக்கவும், உற்பத்தியை பெருக்கவும் அதனை ஊக்குவிக்கவும், அதேபோல பன்றி வளர்ப்போருக்கு கடன் மற்றும் மானியங்கள் வழங்குதல், பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு ஆடு இனப்பெருக்கம் மற்றும் பன்றி வளர்ப்பு கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.
ஆடு இனப்பெருக்க கொள்கை
இந்நிலையில், பூர்வீக ஆடு வகை மற்றும் பன்றிகளை பாதுகாக்க, உற்பத்தியை பெருக்க, ஆடு இனப்பெருக்க கொள்கை மற்றும் பன்றி வளர்ப்பு கொள்கையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சென்னை கால்நடைத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கொள்கையை வெளியிட்டார். அதில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளாடு - மரபணு மேம்பாடு
"தமிழகத்தில் நடந்த 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, செம்மறி ஆடுகள் 45 லட்சம், வெள்ளாடுகள் 98.88 லட்சம் உள்ளன. தற்போது, செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்கு, எந்தவொரு நிலையான கொள்கையும் இல்லை.
குறைந்த முதலீட்டில், நாடோடி மேய்ச்சல் முறைகளின் கீழ், செம்மறி மற்றும் வெள்ளாடுகளை லாபகரமாக வளர்க்க முடியும். இந்த கொள்கை வாயிலாக, பூர்வீக இனங்களை பாதுகாக்கலாம். பூர்வீக செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு இனங்களை பாதுகாப்பது, மரபணு மேம்பாடு போன்றவை, ஆடு இனப்பெருக்க கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.
செம்மறி ஆடுகள்
குறைவாக உள்ள செம்மறி ஆடு வகைகளை, தனித்துவ இனங்களாக அடையாளம் காணவும், வகைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்றி வளர்ப்பு கொள்கையில், 'மரபணு திறனை மேம்படுத்துதல், மேம்பட்ட வகையைச் சேர்ந்த, தனிநிலை நாட்டுப் பன்றிகளின் இனப்பெருக்க திசுக்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் போன்றவை செயல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications