50% கட்டணம்.. எஸ்இடிசி அரசு பேருந்துகளில் வந்தது அதிரடி சலுகை.. இனி ஈஸியா பயணிக்கலாம்.. இதை படிங்க
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் கட்டண சலுகையை கொண்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்எஸ் சிவசங்கர் நியமிக்கப்பட்டதில் இருந்தே பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

முக்கியமாக முன்பெல்லாம் படுக்கைவசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லா அரசு பேருந்துகளில் முன்பு பெண்களுக்கு என்று தனியாக படுக்கை கிடையாது. தனியார் பேருந்துகளில் டிக்கெட் புக் செய்யும் போது பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் அரசு பேருந்துகளில் இந்த வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வது குறைவாக இருந்தது. இதையடுத்து கடந்த வருடம் அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதற்காக, சீட் எண் 1 மற்றும் 4 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் இடையே இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றது. முன்பதிவு செய்யும்போது இணையதளத்திலேயே இந்த இருக்கைகளை தேர்வு செய்ய முடியும். இது போக தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் இந்த பட்டன் அமலுக்கு வந்துள்ளது. பேருந்தில் ஒரு பிரச்சனை என்றால் இந்த பட்டனை அழுத்தினால் போதும். உடனே இந்த தகவல் பல்லவன் சாலையில் உள்ள MTC தலைமையகத்திற்கு செல்லும்.
பேருந்தில் இருக்கும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் மூலம் பேருந்தில் என்ன நடக்கிறது? பேருந்து எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்கப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் இந்த பேனிக் பட்டன் மூலம் எளிதாக புகார்களை தெரிவித்துக்கொள்ள முடியும்.
பெண்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் அமைச்சராக சிவசங்கர் வந்த பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும் இவை.
இந்த நிலையில்தான் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் கட்டண சலுகையை கொண்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6வது பயணம் முதல் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக , வருவாயை பெருக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அப்போதே இந்திய அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.
தனியார் பேருந்துகளையே தொலைதூர பயணத்திற்கு மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். சென்னையில் இருந்து நீண்ட தூரம் செல்ல மக்கள் அரசு பேருந்துகளை விரும்புவது இல்லை.
இந்த நிலையில்தான் மக்கள் வருகையை அதிகரிக்கும் விதமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளில் கட்டண சலுகையை கொண்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications