"நம்பர் 1".. பறந்த "உத்தரவு".. 3 மேட்டர்.. 10 தொகுதிகள்.. திகைக்கும் திமுக.. அடித்து ஆடும் கமலாலயம்
தமிழக பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: அதிமுக, திமுகவைவிட, தமிழக பாஜக எம்பி தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.. ஒருபடி மேலே போய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பதையும் முடிவு செய்துவிட்டதாம்.. இதையடுத்து, கட்சிக்குள் போட்டாபோட்டிகளும் வெடித்து கிளம்பி உள்ளன.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தேர்தல் பணிகளை உடனடியாக துவக்குமாறு 6 மாதங்களுக்கு முன்பே பாஜக மேலிடம் உத்தரவிட்டிருந்தது.
அதுபோலவே சென்னை வந்திருந்த பிரதமர் மோடியும், தமிழகமெங்கும் பூத் கமிட்டிகளை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு சென்றிருந்தார்.

ஹாட்ரிக்
இதையடுத்து, தேர்தல் பணிகளை பாஜக துவங்கியுள்ளது... தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுவிற்கு அடுத்தப்படியாக அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக பாஜக இருக்கிறது.. அந்த உற்சாகத்துடன்தான், எம்பி தேர்தலுக்கான பணிகளை துவங்க மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.. இப்போது அந்த பணிகள் தீவிரமடைந்து, 3 விதமான முடிவுகள் கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த்
முதலாவதாக, கூட்டணி என்றில்லாமல் தனித்து போட்டியிடவும் தன்னை தயார்செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாம்.. பிரதமர் மோடி இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலைக்கும் ஒரு அறிவுரை தந்திருந்ததாக கூறப்படுகிறது.. அதாவது, தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும் என்று சொன்னதாலேயே, தனித்து போட்டி என்ற முடிவில் உறுதியாக உள்ளதாம்.. வேண்டுமானால், தங்களுடன் இணைந்து செயல்படும் டிடிவி தினகரன், விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர்களை இணைத்து கூட்டணியாக போட்டியிட வேண்டும், அப்படியே போட்டியிட்டாலும் கூட்டணி தலைமையாக களமாட வேண்டும் என்பதே அந்த முதல் பாயிண்ட்டாக உள்ளதாம்..!

நம்பர் ஒன் திமுக
இரண்டாவதாக, திமுகவை இன்னும் வேகமாக எதிர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதைப்பற்றியும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும், தமிழக பாஜக தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.. குறிப்பாக, பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி, அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும், இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும், என்ன செய்வீர்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற கூடுதல் உத்தரவையும் பிறப்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

டேமேஜ்
அந்தவகையில், அதிமுகவும் தற்போது பலவீனமாக உள்ள நிலையில், திமுகவுக்கு எதிரான மேலும் சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் பாஜக சார்பாக வியூகங்கள் வகுக்கக்கப்பட்டு வருகின்றனவாம்.. இன்னும் நிறைவேற்றாத வாக்குறுதிகள் + இந்து மதங்களுக்கு எதிரான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சுகள் போன்றவைகளை மக்களிடம் கொண்டு செல்ல போகிறார்களாம்.. இதன்மூலம் மக்களிடம், திமுகவின் நன்மதிப்பை சிதைத்து, கூட்டணி கட்சிகளையும் டேமேஜ் செய்வதே அந்த பிளான்களாம்.

தொகுதிகள்
மூன்றாவதாக, எந்த இடங்களில் போட்டியிடலாம் என்பது குறித்த கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. பல்வேறு கோணங்களிலும் 39 தொகுதிகளிலும் பாஜக டீமை இறக்கி, பல்வேறு கட்டமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுகளின்படி மொத்தம் 10 தொகுதிகளை டாப் லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கு தந்தார்களாம்.. அதன் அடிப்படையில் தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தாராளம் + ஏராளம்
இந்த 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கூட தேர்ந்து எடுத்து விட்டார்களாம்... விரைவில் அவர்கள் மூலம் புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன... அதுமட்டுமல்ல, பணத்தையும், தண்ணீராக செலவழிக்க போகிறார்களாம்.. சும்மாவே பாஜக "தாராளம்" காட்டும் என்பதால், இந்த முறை தாராளங்களுக்கு பஞ்சமிருக்காது என்பதால் நிர்வாகிகள் உற்சாகத்துடன் வேலை பார்க்க துவங்கிவிட்டார்களாம்.. அதுமட்டுமல்ல, சரியாக செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று ஏற்கனவே மாநில தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

தாமரைகள்
அந்தவகையில், செயல்படாத நிர்வாகிகள் மாற்றமும் இருக்கு என்கிறார்கள்.. இதனால், கலக்கமடைந்துள்ள நிர்வாகிகள் வேட்டியை மடித்துக் கொண்டு தொகுதிகளில் இறங்கி விட்டனர்.. இன்னொரு கொசுறு தகவலும் உண்டு.. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் வெற்றி பெற்றால், 5 பேர் மத்திய அமைச்சராவது உறுதியென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், பாஜகவின் சீனியர் தலைவர்கள் தீயாய் வேலை செய்ய துவங்கிவிட்டார்களாம்..!
-
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்












Click it and Unblock the Notifications