அரசு ஊழியர்களுக்கெல்லாம் சம்பளம் ஏறுதா? எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் DA & DR? மகிழ்ச்சி செய்தி எப்போது
சென்னை: பொதுத்தேர்தல் நடந்து முடிந்து, புதிய ஆட்சி அமைய போகிறது.. அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி தகவல் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டின் (AICPI Index) அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு வருகிறது..

DA மற்றும் DR ஐ வருடத்துக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்படுகிறது.. அந்தவகையில், மத்திய அரசு DA மற்றும் DR இல் 4% அதிகரிப்பை அறிவித்தது. அதன் பிறகு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தது.
அலவன்ஸ்: அதாவது, 3 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், 4 சதவிகித அகவிலைப்படியை அதிகரித்து, மேலும் சில அலவன்சுகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன.
அதேபோல, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய நகரங்கள், எக்ஸ் (X), ஒய் (Y), இசட் (Z) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.. இவற்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 27, 18, 9 சதவீதம், அவர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து கணக்கிட்டு, வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது.
வீட்டு வாடகைப்படி: அதேபோல, மத்திய பணி தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, வீட்டு வாடகைப்படியை, 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி, ஜனவரி 1 முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்க சில தினங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளும் எகிறி வருகின்றன.. அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால் அது 54 சதவீதமாக இருக்கும்... அத்துடன், இது அடிப்படை ஊதியத்தையும் உயர்த்தும் வகையிலும் இருக்கும்...
அகவிலைப்படி: 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது அது பூஜ்ஜியமாக குறைக்கும் விதிமுறை உள்ளது.. அப்படி பூஜ்ஜியமாகினால் மறுபடியும் அகவிலைப்படி 4 சதவீதமாக உயர்த்தப்படலாம்.. ஒருவேளை பூஜ்ஜியமாக இல்லாவிட்டால் அது 54 சதவீதமாகவே கருதப்படும். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவுமே இதுகுறித்து வரவில்லை..
மக்களவை தேர்தலுக்கு பிறகு இதுகுறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் என்று சொல்லப்பட்டு வந்தநிலையில், தற்போதுதான், தேர்தல் முடிந்துள்ளது.. இன்னும் சில நாட்களில் புதிய ஆட்சி அமைய போகிறது. புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் 8வது ஊதியக்குழு அறிமுகம் செய்யப்படும் என்ற நம்பிக்கை பெருகி வருகிறது..
குட்நியூஸ்: அதுமட்டுமல்லாமல், 10 வருடத்துக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படுவதால், இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும், அகவிலைப்படி 50 சதவிகிதத்தை தாண்டியவுடன் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என்றும் தகவல்கள் வலம்வருகின்றன.
அப்படியொரு குட்நியூஸை மத்திய அரசு அறிவித்தால், 67.95 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்கள், DA, DR உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிச்சயம் நிம்மதியை தரும் என்றே நம்பப்படுகிறது.
பொதுத்துறை: அதேபோல, பொதுத்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு மிகவும் குறைவாக உள்ளது... பொதுவாக இந்த அதிகரிப்பு 3-4 சதவிகிதமாக இருக்கும்... இந்த சதவீதம் அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது... உதாரணத்துக்கு, ஒரு ஊழியர் ரூ.50 ஆயிரம் பெற்றால், 3 சதவீத உயர்வின் கீழ் 1,500 அதாவது, ஜூலை மாத சம்பளத்தில் கூடுதல் ரூ.1,500 கூடுதலாக சேர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications