நெளிந்த எடப்பாடி பழனிசாமி.. பக்கத்திலேயே ஓபிஎஸ்.. 4 மாசமாச்சே.. சங்கடப்பட்ட அதிமுகவை கவனித்த திமுக..!!

பரபரப்பான சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று 2வது நாளாக கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 மாதங்களுக்கு பிறகு, ஓபிஎஸ் + எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே சட்டசபையில் உட்கார்ந்திருந்த அதிசயம் இன்றைய தினம் நடந்தது.

சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகாமையில் இருக்கும் எதிர்கட்சி துணைதலைவர் நாற்காலியில் ஓ.பன்னீர்செல்வம் அமர வேண்டியிருக்கும்.

இது இருவருக்குமே சங்கடமான சூழல் என்பதால், என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 பறந்த லெட்டர்

பறந்த லெட்டர்

வழக்கமாக, எதிர்கட்சி தலைவர் மற்றும் எதிர்கட்சி துணை தலைவர் ஆகியோருக்கு அருகருகே இருக்கைகள் போடப்பட்டிருக்கும்.. அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அருகருகே உட்கார வேண்டிய சூழல்தான் எப்போதும் உள்ளது. ஆனால், எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டு, உதயகுமாரை நியமித்திருப்பதாக அதிமுக கொறடா வேலுமணி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

 யார் யார்

யார் யார்

ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கடிதம் மீது அப்பாவு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்காமலேயே இருந்தார்.. எனவே நேற்றைய தினம் சட்டசபை கூடிய நிலையில், யார் எதிர்க்கட்சி துணை தலைவராக சபாநாயகர் அப்பாவு யாரை அறிவிக்கப்போகிறார்? இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு நேற்று காலையியே துவங்கியது..

 சீட் அலாட்

சீட் அலாட்

எதிர்பார்த்தபடியே, எதிர்க்கட்சி துணை தலைவர். இருக்கை ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டது.. இந்த விஷயம் முன்கூட்டியே லேசாக கசிந்ததால், எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பு எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வரவில்லை.. இந்நிலையில், இன்று 2வது நாளாக சட்டசபை கூடஉள்ள நிலையில், அதற்கு முன்கூட்டியே, எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக தான் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவுவை, எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார்..

ஆப்சென்ட்

ஆப்சென்ட்

அதற்கு அப்பாவு, "நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் என்னை கட்டாயப்படுத்த முடியாது.. சபை விதிகள் உள்ளன.. அதற்கேற்றபடிதான் முடிவு எடுக்க முடியும்எதிர்கட்சித்துணைத்தலைவர் யார் என்பதை சட்டசபையில் அறிவிப்பேன் என்று எடப்பாடி பழனிச்சாமியிடமும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களிடமும் கூறினார் அப்பாவு. அப்பாவு இப்படி சொன்ன அடுத்த சில நிமிடங்களிலேயே அவை கூடியது.. நேற்றைய தினம் ஆப்சென்ட் ஆன எடப்பாடி & டீம் அப்படியே மொத்தமாக இன்று சபைக்குள் நுழைந்தனர்..

 4 + 5 மாதங்கள்

4 + 5 மாதங்கள்

அங்கே ஓபிஎஸ் அருகில் போடப்பட்டிருந்த, எதிர்க்கட்சி துணை தலைவர் சீட்டில் வந்து உட்கார்ந்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்து மாதக்கணக்கில் ஆகிறது.. இந்த 4 மாத காலத்தில் எத்தனையோ கட்சி நிகழ்வுகள், கூட்டங்கள், விழாக்கள் நடந்தன.. ஆனால், இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காமல் அவைகளை தவிர்த்தே வந்தனர்.. பிரதமர் மோடி சென்னை வந்தபோதுகூட, தனித்தனியாகத்தான் சந்தித்து பேசினர்..

 சீட் அலாட்

சீட் அலாட்

ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு கேட்டு திரௌபதி வந்தபோதும், தனித்தனியாகவே சந்தித்து ஆதரவு தந்தனர்.. பொதுநிகழ்வுகளையும், கட்சி நிகழ்வுகளையும் தங்களுக்கு வசதியாக இரு தரப்புமே தவிர்த்து வந்த நிலையில், சட்டசபை நிகழ்வில் அப்படி செய்ய முடியாது.. எங்கே சீட் போடப்பட்டுள்ளதோ, அங்குதான் அமர வேண்டும் என்பது சட்டசபை விதி.. அதன்படி, இன்று ஓபிஎஸ் + எடப்பாடி அருகருகில் உட்கார்ந்திருந்தனர்.. அடுத்த செகண்டே, சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட எடப்பாடி ஆரம்பித்துவிட்டாலும், இவர்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்தது ஒருசில நிமிடங்களே இருக்கும்..

 நெளிந்த எடப்பாடி

நெளிந்த எடப்பாடி

இப்படி அருகருகே உட்காருவதால், ஓபிஎஸ்ஸுக்கு எந்தவிதமான சங்கடமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.. காரணம், அவர்தான் கட்சி இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருபவர்.. இந்த சங்கடம் எடப்பாடிக்கு வேண்டுமானால் இருந்திருக்ககூடும்.. ஆகமொத்தம், இவர்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நமக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிதான்,, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்தான்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+