ரைட்டு.. டிக்கெட் ஓகே! டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல்.. ஓபிஎஸ் ஒரே குஷி! எடப்பாடிக்கு பெரிய ஷாக்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உச்சகட்டத்தை எட்டி, தீர்ப்புக்கு காத்திருக்கும் வேளையில், ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட 'டாப்' தலைவர்களைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ்ஸின் இந்த முயற்சிக்கு டெல்லியும் பச்சைக்கொடி காட்டியிருப்பதால், வரும் நாட்களில் பெரும் திருப்பங்கள் காத்திருக்கின்றன என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையின்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் பரபரவென அட்டாக் - கவுன்ட்டர் அட்டாக் நிகழ்த்திய நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினருமே, தங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. இதில், டெல்லியின் கை தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் பல்வேறு அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளாராம்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான அதிகார யுத்தத்திற்கு இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. ஒற்றைத்தலைமை விவகாரத்தால் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிவிட்டு தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து நிரந்தர பொதுச் செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார் ஈபிஎஸ். இதற்கிடையே, ஓபிஎஸ், அந்த பொதுக்குழுவை எதிர்த்து தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

தீர்ப்புக்கு வெய்ட்டிங்
ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதியும், இரு நீதிபதிகள் அமர்வும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஓபிஎஸ் தரப்பு. உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்தது. இரு தரப்பும் தீவிரமாக வாதங்களை முன்வைத்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு தரப்பையும் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தீர்வு கிடைக்குமா?
இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு தான் சாதகமாக வரும் என இரு தரப்புமே நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். எனினும், உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிமுக எனும்படி தெளிவான தீர்ப்பாக இருக்காது என்றும், இந்த தீர்ப்பு இதுவரையிலான சிக்கலுக்கு முடிவுகட்டும் வகையில் இருக்காது என்றும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த மோதல் விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் எனக் கூறுகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என்ற நிலையும் இருக்கிறது.

எதிரும் புதிருமாக
இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்புமே, பாஜகவின் ஆதரவைப் பெறுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக ஓபிஎஸ்ஸொ, ஈபிஎஸ்ஸோ ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. நேற்று முன்தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைத்த பொங்கல் விழாவில் முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பங்கேற்றனர். ஆளுநர் அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். ஒரே மேஜையில் எடப்பாடி பழனிசாமி இடதுபக்கமும், ஓ.பன்னீர்செல்வம் வலதுபக்கமும், நடுவில் ஆளுநர் ரவியும், இன்னும் சிலரும் அமர்ந்திருந்தனர். ஒரே மேஜையில் எதிரும் புதிருமாக இருக்கும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோரை அமரவைத்தார் ஆளுநர் ரவி.

டெல்லி பச்சைக்கொடி
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சில முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாகவும், டெல்லியும் அதற்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இது ஈபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைவர்களுடன் சந்திப்பு
ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே சில முறை டெல்லிக்குச் சென்று திரும்பினர். பிரதமர் மோடியை இருவருமே தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை என்றாலும் பாஜகவின் முன்னணி தலைவர்களை சந்தித்துப் பேசிவிட்டே திரும்பினர். அதேபோல, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வந்தபோதும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கடைசியாக அமித்ஷா சென்னை வந்தபோது ஓபிஎஸ் மட்டுமே சென்று சந்தித்தார். இந்த சந்திப்புகள் எல்லாமே அதிமுகவில் நிலவி வரும் மோதலை முன்வைத்துத்தான். இந்நிலையில் தான் ஓபிஎஸ்ஸின் எதிர்வரும் டெல்லி பயணமும் முக்கியத்துவம் பெறுகிறது.

பெரும் புயல்
வெகு விரைவில், அநேகமாக ஜனவரி மாத இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு செல்லவிருக்கிறார் என்றும், அந்த டெல்லி பயணத்தின்போது மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த டெல்லி விசிட்டுக்குப் பிறகுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆகமொத்தம், ஓபிஎஸ்ஸின் டெல்லி விசிட்டிக்குப் பிறகு அதிமுகவில் ஒரு பெரிய புயலே அடிக்கப்போகிறது என்கிறார்கள்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!












Click it and Unblock the Notifications