திமுக போட்ட விதை.. விஜய் உருவாக்கிய புதிய அமைச்சகம்.. செயற்கை நுண்ணறிவுக்கு தனி அமைச்சர்!
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) துறைக்கென தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதற்காக புதிய பரிமாணமாக ஏஐ துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிவ் ஏற்கனவே தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டவ் சேவைகள் அமைச்சகம் இருந்த நிலையில் தற்போது புதிதாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) அமைச்சகம் உருவாகியுள்ளது. முதல்வர் விஜய் இந்த 3 முக்கிய துறையும் இன்று அமைச்சராக பொறுப்பெற்றுள்ள ஆர். குமார்-க்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் ஆர்.குமார்
வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமார் தமிழ்நாட்டின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இது தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற உடன், தனது இருக்கையைத் தொட்டு வணங்கிய ஆர்.குமார், ஊடகங்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசினார். "தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய துறையை என்னிடம் ஒப்படைத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு நன்றியும், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உள்ளேன்" என்று தெரிவித்தார். மக்கள் விரைவில் இந்தத் துறையின் நன்மைகளை உணர்வார்கள் எனவும் ஆர்.குமார் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே 2வது மாநிலம்
கேரளாவுக்கு அடுத்தாக நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவுக்கென தனி அமைச்சகம் உருவாக்கிய இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய கூட்டணி அமைச்சரவை, டிஜிட்டல் புரட்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
திமுக போட்ட விதை
திமுக ஆட்சியில் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சி, முக்கியதுவம் உணர்ந்து தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி AI மையமாக மாற்றும் நோக்கில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சகத்தின் கீழ் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் (TNAIM) என்ற அமைப்பை தொடங்கப்பட்டது. இதன் நீட்சியாக தற்போது புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
திமுக அரசு ஏஐ துறையில் பயிற்சி, கட்டமைப்பு, கூட்டணி, அரசு பணியில் ஏஐ இணைப்பது என பல முயற்சிகளுக்கு முதல் ஆண்டிலேயே சுமார 13 கோடி ரூபாய் செலவு செய்தது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விரிவாக்கப்பட்டு வருகிறது. ஏஐ துறை வளர்ச்சிக்காக திமுக போட்ட விதை தான் தற்போது விஜய் அரசில் தனி துறையாக வளர்ந்து நிற்கிறது.
புதிய இலக்குகள்
இந்தப் புதிய துறையின் மூலம் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் முதல் AI பல்கலைக்கழகம் உருவாக்கப்படவுள்ளது. சென்னையில் உலகத் தரத்திலான ஏஐ சிட்டி (AI City) அமைக்கப்படும். மேலும் மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் புத்தாக்க மையங்கள் (Innovation Hubs) ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் ஏஐ துறைக்கு அடுத்த தலைமுறையினரை தயார்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாவட்டம்
வேளச்சேரி தொகுதியைச் சேர்ந்த ஆர். குமார் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதன் மூலம் சென்னை மாவட்டத்தின் அமைச்சரவைப் பிரதிநிதித்துவமும் வலுப்பெற்றுள்ளது. இந்தப் புதிய அமைச்சகம் மாநில நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு, தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்த அமைச்சகம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.














Click it and Unblock the Notifications