TNPSC: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 461 காலியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்
சென்னை: டிஎன்பிஎஸ்சியில் காலியாக உள்ள 461 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இண்டர்வியூ இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைப் பணிகள் (சிடிஎஸ்இ) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து விவரங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2026 ஆம் ஆண்டிற்கான 461 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைப் பணிகளுக்கு (சிடிஎஸ்இ) (நேர்காணல் இல்லாத பதவிகள்) புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி, இன் ஜினியரிங்க் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது நிரந்தரமான தமிழ்நாடு அரசு வேலையாகும்.

பணியிடங்கள் விவரம்:
புவியியல் மற்றும் சுரங்கத் துறை - உதவி புவியியலாளர் - 08 பணியிடங்கள்
வேளாண் பொறியியல் துறை - உதவி புவியியலாளர் - 02 பணியிடங்கள்
உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்) - 64 பணியிடங்கள்
வேளாண்மைத் துறை - வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) (வேளாண் பொறியியல்) - 11 பணியிடங்கள்
மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை - மருந்து ஆய்வாளர் - 09 பணியிடங்கள்
தோட்டக்கலைத் துறை - தோட்டக்கலை அலுவலர் - 17 பணியிடங்கள்
நெடுஞ்சாலைத் துறை - உதவி பொறியாளர் - 38 பணியிடங்கள்
தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை - உதவி இயக்குநர் (தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) - 03 பணியிடங்கள்
பொதுப்பணித் துறை - இளநிலை உதவி இயக்குநர் (கொதிகலன்) - 02 பணியிடங்கள்
இளநிலை கட்டிடக் கலைஞர் - 05 பணியிடங்கள்
உதவி பொறியாளர் (சிவில்) - 14 பணியிடங்கள்
உதவி பொறியாளர் (மின்சாரம்) - 13 பணியிடங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - உதவி பொறியாளர் - 50 பணியிடங்கள்
நீர்வளத் துறை - உதவி பொறியாளர் (சிவில்) - 33 பணியிடங்கள்
உதவி புவியியலாளர் - 09 பணியிடங்கள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - உதவி பொறியாளர் (சிவில்) - 01 பணியிடம்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் - உதவி பொறியாளர் - 01 பணியிடம், சுற்றுச்சூழல் விஞ்ஞானி - 04 பணியிடங்கள்
நகர மற்றும் ஊரகத் திட்டமிடல் துறை - கட்டிடக்கலை உதவியாளர் / திட்டமிடல் உதவியாளர் - 03 பணியிடங்கள்
தொழில் மற்றும் வர்த்தகத் துறை - உதவி பொறியாளர் (தொழில்துறை) - 01 பணியிடம்
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு லிமிடெட்:
உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) - 04 பணியிடங்கள்
உதவி மேலாளர் (சிவில்) - 02 பணியிடங்கள்
உதவி மேலாளர் (மின்சாரம்) - 02 பணியிடங்கள்
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் - உதவி கணக்குகள் அலுவலர் - 01 பணியிடம்
தொல்லியல் துறை - தொல்லியல் அலுவலர் - 10 பணியிடங்கள்
என 41 வகையான பணியிடங்களில் 461 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
பணியிடத்திற்கு தகுந்தபடி கல்வித்தகுதி மாறுபடும். பி இ/பிடெக், பிஎஸ்சி, பி.ஆர்க், பி.நூலக அறிவியல் ( B Lib science), எல்.எல்.பி, எம்பிஏ, எம்.எஸ்.சி ஆகிய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மற்றும் காலியிடங்கள் குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
ஜூலை 1, 2026 நிலவரப்படி, குறைந்தபட்சம் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு மற்றும் சலுகைகள் குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை, ஒருமுறைப் பதிவுக்கான ரூ.150/-, தேர்வுக் கட்டணம் ரூ.100/- ஆகும். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பதிவு செய்திருந்தால் ரூ.150 கட்ட தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள், வரும்27 முதல் ஜூன் 25, 2026 இரவு 11:59 மணிக்குள் https://tnpsc.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 25 ஆம் தேதி ஆகும். திருத்தங்கள் செய்ய ஜூன் 29 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://tnpsc.gov.in/document/english/CTS(Non%20Interview)%20English%20Final_.pdf














Click it and Unblock the Notifications