ரேஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரெடியா மக்களே.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை பாருங்க.. சூப்பர்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், இன்னொரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன்தாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பலன்களை பெற்று வருகின்றனர்.

பொங்கல் அரசு: தமிழக அரசு அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன.. விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போவதால், இதற்கான , பரிசு தொகுப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன்தாரர்களின் நன்மை கருதி, முகாம்களும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.
குறைகள்: இந்த முகாம்களில், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வரு நிலையில், இப்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள்: "பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம், டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது... ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை எடுத்து சொல்லலாம்.. மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தால் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளலாம்.
நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளது. சேவைகளில் ஏதாவது குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தாலும், அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications