சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சர்ப்ரைஸ்" தர போகிறார் ஸ்டாலின்.. அதிமுக பிளான் "டோட்டல் சேஞ்ச்".. தமிழக அரசின் அதிரடி.. ஆஹா ஆவின்

ஆவின் குடிநீரை வழங்க திமுக அரசு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட திட்டங்கள், இப்போது மீண்டும் செயல்வடிவம் பெற்று வருகின்றன.. அந்த வகையில், கிடப்பில் கிடந்த புது திட்டம் ஒன்று உயிரோட்டம் பெற்றுள்ளது.

பொதுவாக, ஆட்சி மாறும்போது, கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, கிடப்பில் போடுவது என்பது எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்வது இயல்புதான்...

அந்தவகையில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு மூடுவதாக குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலேயே எழுந்தன..

இந்த வேலை வேண்டாம்.. நாகரீகம் முக்கியம்.. அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் போட்ட உத்தரவு! இந்த வேலை வேண்டாம்.. நாகரீகம் முக்கியம்.. அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் போட்ட உத்தரவு!

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதை முதலில் கிளப்பியதே எடப்பாடி பழனிசாமிதான்.. திமுக அரசு மீது, பொங்கல் தொகுப்பில் ஊழல் குற்றச்சாட்டை முதலில் வீசியவரும் எடப்பாடி பழனிசாமிதான்.. அந்தவகையில், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களையும் மூடிவருவதாக கூறினார்.. ஒருமுறை இந்த புகார் சட்டசபையிலும் வெடித்தது.. அதற்கு அமைச்சர் கேஎன் நேரு, "அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டுதானே இருக்கிறது.. பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணியில் இயங்கி கொண்டுதானே இருக்கிறார்கள்" என்று காட்டமாக கூறினார்.

 படக்கென சொன்ன ஸ்டாலின்

படக்கென சொன்ன ஸ்டாலின்

அப்போதும் எடப்பாடி பழனிசாமி விடவில்லை.. "அம்மா கொண்டு வந்த திட்டங்களை மூடினால், நீங்கள் அனுபவிப்பீர்கள் என்றார்.. அப்போது டக்கென எழுந்த முதல்வர் ஸ்டாலின், "ஏன், கலைஞர் பெயரில் உள்ள திட்டங்களை மூடியதால்தான் இந்த முறை நீங்கள் ஆட்சி அமைக்காதபடி, தமிழக மக்கள் உங்களுக்கு தண்டனையை கொடுத்துள்ளனர்.. நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கிருக்கிறீர்கள்" என்றார். இப்படி பல முறை விவாதங்கள் சட்டசபையில் வெடித்துள்ளது.. ஆனால், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர் என மக்களுக்கு பயன்படும் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்திவிட்டதாகவும், நடமாடும் மருத்துவமனையால் ஒரு பயனும் இல்லை என்றும் தொடர்ந்து அதிமுக தரப்பில் புகார்கள் வெடித்தவண்ணம் உள்ளன..

 கலைஞர் - கல்வெட்டு

கலைஞர் - கல்வெட்டு

ஆனால், இதற்கு திமுகவும் தக்க பதில்களை தந்து கொண்டே வருகிறது.. எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை.. மலிவு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. கலைஞர் தொடங்கிவைத்த திட்டங்களில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளிலிருந்த கலைஞர் என்ற பெயரை மட்டும் வெட்டி எடுத்துவிட்டார்களே.. இதெல்லாம் நியாயமா? திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் அந்தப் பெயரிலேயே செயல்பட்டது. பாடப் புத்தகப்பையில் எடப்பாடி, ஜெயலலிதா படங்கள் அப்படியே இருந்ததே.. இதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா? என்று பதிலுக்கு சீறுவதும் உண்டு.

 தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீர் பாட்டில்கள்

எவ்வளவுதான் பெருந்தன்மையுடன் நடந்தாலும், குறை சொல்லி கொண்டே அதிமுக இருப்பதால், திமுக தங்கள் பாணி அரசியலை கையில் எடுத்துள்ளனர்.. அதிமுக ஆட்சியில், அம்மா குடி நீர் திட்டம் பயன்பாட்டில் இருந்தது... லிட்டர் 1 ரூபாய் விலையில் இந்த பாட்டில் விற்கப்பட்டது.. இந்த பொறுப்பை அப்போது, போக்குவரத்து துறை ஏற்றிருந்தது.. அதனால்தான், அனைத்து போக்குவரத்துக்கழக டிப்போக்களிலும், பஸ் ஸ்டாண்டுகளிலும் அம்மா குடிநீர் விற்கப்பட்டது... பஸ் ஸ்டாண்டுகளிலேயே தண்ணீர் பாட்டில்கள் விற்றதால், பயணிகள் இந்த குடிநீரை விருப்பப்பட்டு வாங்கினார்கள்.. பொது மக்களிடமும் பெறும் வரவேற்பை பெற்றது.

Recommended Video

    Aavin பாலில் ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ஊழல்! - Jayakumar
     மீண்டும் வருகிறது

    மீண்டும் வருகிறது

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் கொண்டு வரப்படுகிறது.. ஆனால், அம்மா குடிநீரை, ஆவின் குடிநீர் என்று மாற்றி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்தை போக்குவரத்து கழகம் செயல்படுத்தியதுபோல், இந்த முறை, இத்திட்டத்தை ஆவின் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளைத் துவக்கியுள்ளது ஆவின் நிறுவனம்..!

    English summary
    big news for tn people by dmk government and Aavin water bottle ஆவின் குடிநீரை வழங்க திமுக அரசு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X