சிந்தனை செல்வனுக்கு ஆஃபர்! வாரிய பதவிகளுடன் விசிக-வை வளைக்கும் தவெக? திருமாவளவன் முடிவில் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியலில் தவெக - விசிக கூட்டணிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திருமாவளவனை நேரடியாக அமைச்சரவைக்குள் கொண்டுவர முதல்வர் விஜய் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். இந்த அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் வியூகங்கள் மற்றும் விசிக-வின் எதிர்வினை என்ன என்பது குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் என்ன தெரியுமா? கூட்டணி தர்மமும், அதன் நீட்சியாக ஆட்சியில் பங்கேற்பது தொடர்பான விவாதங்களும் தான்.

தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக, தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள மிக முக்கியமான கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளை அரவணைத்துச் செல்வதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.
தவெக அமைச்சரவையில் விசிக
முதல்வர் விஜய் தரப்பில் இருந்து விசிகவுக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவி என்பது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், கூட்டணியின் பிணைப்பை மேலும் பலப்படுத்த இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளை அவர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதாவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மேலும் இரண்டு வாரியத் தலைவர் பதவிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளராம்.
சிந்தனை செல்வனுக்கு போஸ்டிங்
இதில் சிந்தனை செல்வன் மற்றும் விசிக-வின் மற்றொரு முக்கியப் பிரமுகருக்குப் பொறுப்புகள் வழங்கவும் தயாராக உள்ளாராம்.. வன்னி அரசு ஏற்கனவே ஒரு முக்கிய இலாகாவைக் கவனித்து வரும் நிலையில், தற்போதைய ஒதுக்கீட்டில் விசிகவுக்கு சற்று அதிருப்தி இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதனைச் சரிசெய்யவும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் நம்பிக்கையை பெறவுமே இந்த வாரியத் தலைவர் பதவிகள் ஒரு அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, விசிக தலைவரே நேரடியாக அமைச்சரவையில் இணைய வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் எதிர்பார்ப்பாக இப்போதுவரை உள்ளதாம். "நீங்கள் அமைச்சரவைக்குள் வந்தால், உங்களுக்கு விருப்பமான துறையைத் தருகிறோம்" என்றுகூடு விஜய்யே நேரடியாக சொன்னாராம்.. அதாவது தமிழக அரசின் மிக முக்கிய முடிவெடுக்கும் அதிகார மையத்தில் விசிக-வை முழுமையாக இணைக்கவே விஜய் ஆசைப்படுகிறாராம்.
திருமாவளவன் அமைச்சரவை சான்ஸ்
ஆனாலும் திருமாவளவன் இந்த வாய்ப்பைத் தீர்க்கமாக மறுத்துவிட்டாராம்.. காரணம், "ஆட்சியில் நானே நேரடியாக பங்கெடுத்தால், அதிகாரத்திற்காகத்தான் நான் இத்தனை காலம் போராடினேன், உங்களுடன் கூட்டணி வைத்தேன் என்ற விமர்சனங்கள் என் மீது எழும். அது என் கொள்கை ரீதியான பயணத்திற்குத் தடையாக அமையும்," என்று அவர் விஜய்யிடமே வெளிப்படையாக கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, அமைச்சர் பதவி என்பது அவருக்கு ஒருபோதும் ஈர்ப்பைத் தரவில்லை என்றும், சமூக நீதிப் போராட்டமே தனது முன்னுரிமை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
விசிகவுக்கு வாரிய பதவிகளுடன் விஜய்
அப்போதும் விடாத விஜய் தரப்பு, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திருமாவளவனை கேட்டுக் கொண்டு வருகிறார்களாம்..
ஆனால், முதல்வர் விஜய்யின் வியூகத்தின்படி, திருமாவளவன் சட்டமன்றத்திற்குள் வருவது அரசின் செயல்பாடுகளுக்குப் பெரும் பலமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவது பற்றிய ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனவாம்.
ஒருபுறம் அமைச்சரவை பதவி, மறுபுறம் தொகுதி சார்ந்த அழுத்தம் எனத் திருமாவளவன் மிக நெருக்கடியான அரசியல் சூழலில் இருக்கிறார். அவரே அமைச்சரவையில் இணைவாரா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலேயே தொடர்வாரா என்பத தெரியவிலை.. ஆனால், அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழகத்தின் அதிகார மையத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் காத்திருக்கின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications