"சுழன்ற சாட்டை".. 13 ஏஎஸ்பிக்கள்.. 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது...
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் என்பது வழக்கமாக செய்யப்படும் ஒரு நடைமுறைதான்.. பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய பணியிடம் வழங்கப்படுவதும், அதிகாரிகளுக்கு உயர் பதவி உயர்வு தரப்படுவதும் அடிக்கடி நிகழக்கூடிய நடைமுறையாகும்.
அந்தவகையில்தான் இப்போதும் டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.. 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்துள்ளது..

டிரான்ஸ்பர்
அந்தவகையில், கொளத்தூர் காவல் மாவட்டத்தின் துணை ஆணையராக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் உள்ளதாவது:

அகாடமி
"தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் மைய எஸ்பியாக ஜானகிராமனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையர் அலுவலக எஸ்பியாக மங்களேஸ்வரனும், சென்னை பயிற்சி கல்லூரி எஸ்பியாக சந்திரமவுலியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாக மாரிராஜனும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக மோகன் நவாஸும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சென்னை எஸ்பியாக கெங்கைராஜும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஜி நியமனம்
அதேபோல் மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார். சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி, உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சுப்பாராஜூக்கு எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டு, டிஜிபி அலுவலக நிர்வாக எஸ்பி, உதவி ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருச்சி ஏஎஸ்பி ஆசைத்தம்பி, திருப்பூர் நகர எஸ்பியாக பதவி உயர்த்தப்படுகிறார். ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பி. முத்துக்கருப்பன், பழனி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

சைபர் branch
கொளத்தூர் காவல் துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் செவ்வூர் சிறப்புக் காவல் பட்டாலியன் எஸ்பி சந்திர சேகரன், கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்படுகிறார்.வேலூர் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியின் ஏஎஸ்பி, வேலூர் மாவட்ட சேவூர் பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் எஸ்பியாக பதவி உயர்வு செய்யப்படுகிறார். செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பொன்ராமு பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ரயில்வே எஸ்பியாக நியமிக்கப்படுகிறார். அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பி.ரவிசேகரன், சென்னை ஐ.ஜி. தலைமையகத்தில் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்'' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications