சல்லி சல்லியா நொறுங்குதே.. திமுக ஓட்டு சிதறுதா? "கோட்டையில்" நுழைந்து"மேட்டரை" பிடித்த பாஜக..எகிறுதே
சென்னை: திமுக கூட்டணி வாக்குகளை பிரிக்க, மிக மிக நுட்பமான காய்நகர்த்தல்களை பாஜக மேற்கொண்டுள்ளது.. அந்தவகையில், கோவை தொகுதியை அள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எம்பி தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன.. இதனால், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன...
அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்... இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் களப்பணியும் அதிகரிக்க துவங்கிவிட்டது.

திமுக: எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியுடன் இணைந்தே மய்யம் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. திமுக ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல் நினைக்கிறாராம்..இதற்கு காங்கிரசும் பெருத்த துணையாக இருந்து வருகிறது.. எனவே, கமல் எங்கே போட்டியிட போகிறார் என்ற ஆர்வம் கடந்த சில மாதங்களாகவே நிலவி வருகிறது.
சமீபத்தில், தென் சென்னை லோக்சபா தொகுதியில், உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடப்பதாக தகவல்கள் கசிந்தன.. கடந்த லோக்சபா தேர்தலில் மய்யம் சார்பில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், 1.20 லட்சம் ஓட்டுக்களை பெற்றிருந்தார். அதேபோல சட்டசபை தேர்தலிலும், கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.. அதனால், தென்சென்னை தொகுதியை குறிவைத்து, கமலின் தேர்தல் வேலை நடப்பதாக கூறப்பட்டது.
வேளச்சேரி: இந்த தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, தென் சென்னை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி..
யாருடைய வாக்குகள்: அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்.. அதனால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. மேலும், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது.. அந்தவகையில், கமல் இங்கு போட்டியிட நேர்ந்தால், யாருடைய வாக்குகளை கமல் பிரிக்க போகிறார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.
ஆனால், இப்போது வேறு ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. இந்த முறையும் கோவை தொகுதியிலேயே போட்டியிட போவதாக கூறப்படுகிறது... அதற்கேற்றவாறு, கோவை தொகுதி மக்களை கவரும் வகையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் பஸ் பெண் டிரைவரை அழைத்து அவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்திருந்தார் கமல்.. இதைத்தவிர, கோவை தொகுதியை குறிவைத்தே, கமல்ஹாசன் களப்பணிகளை மேற்கொண்டு வருவதால், இங்கு போட்டியிடுவது உறுதி என்கிறார்கள்.
கமல்ஹாசன் ப்ளான்: கமல்ஹாசன் இங்கு போட்டியிடும் செய்தியைவிட, அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் பாஜக வேட்பாளர் யார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும், ஆர்வமாகவும் எழுந்துள்ளது.
கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன், இப்போது, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகிவிட்டார்.. ஆனால், கமலை எதிர்த்து நிறுத்தும் வேட்பாளர் தொகுதியில், மிகமிக பிரபலமான நபர் களமிறங்க வேண்டும்.. அத்துடன் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் நினைக்கிறது...
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் முதன்மையாக கருதுவது இந்த கோவையைதான்.. அதனால், பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.. வானதி சீனிவாசன் இப்போது எம்எல்ஏவாக இருக்கிறார் என்றாலும், அவரையே மறுபடியும் களம் இறக்க தாமரை கட்சி விரும்புவதாக சொல்கிறார்கள்..
ராமநாதபுரம்: இதனிடையே, பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியபடியே உள்ளன.. ஆனால், அப்படி ஒரு முடிவு அறிவிக்கப்பட்டால், ராமநாதபுரத்தில் கமல்ஹாசனை நிறுத்த திமுக யோசித்து வருவதாகவும் சொன்னார்கள்.. காரணம், இந்துத்துவா ஆதரவு மண் என்று ராமநாதபுரத்தை முழுமையாக சொல்லிவிட முடியாது.. இங்கு பெருவாரியான முஸ்லிம்களின் வாக்குகளும் உள்ளன.. இந்த முஸ்லிம்களின் வாக்குகள், பாஜகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகளை அள்ளித்தரும் என்ற கேள்வியும் உள்ளது..
அதேசமயம், பாஜக அதிருப்தி ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் தன்பக்கம் இழுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. ஆனால் இதுவும் உறுதியாக இதுவரை தெரியவில்லை.
என்னாகும்: ஒருவேளை தென்சென்னையில் கமல் போட்டியிடுவதாக இருந்தால், அங்கு யார் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரியவில்லை.. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, முதல்நாளிலேயே தென்சென்னையில்தான் ஆலோசனை நடத்தினார்..
அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர் என்றாலும், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது..
மேலும், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் இருக்கத்தான் சய்கிறது. ஆக மொத்தம், தென்சென்னையாக இருந்தாலும்சரி, கோவையாக இருந்தாலும்சரி, ராமநாதபுரமாக இருந்தாலும் சரி, பாஜகவுக்கு எதிராக களமிறங்க போவது கமல்ஹாசனாகத்தான் இருக்கும் என தெரிகிறது.. இதில், பாஜக வாக்குகளை கமல் பிரிக்க போகிறாரா? அல்லது திமுக கூட்டணியின் வாக்குகளை பாஜக அள்ள போகிறதா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications