இந்த மாசம் "இபி பில்" கட்டிட்டீங்களா? கரண்ட் பில்லில் மாற்றம்.. மின்வாரியம் அறிவிப்பு.. எப்போ பாருங்க
சென்னை: மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க உதவும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.. இதையடுத்து தமிழக மின்வாரியத்தின் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
சமீபகாலமாக, மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஸ்மார்ட் மீட்டர்: 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது என்ற புகார்களும் வெடித்தன. அதனால்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு முன்னிலைப்படுத்தியது. இந்த திட்டத்தின் பயன்பாடு என்னவென்றால், தானாகவே ஸ்மார்ட் மீட்டர் ரீடிங் எடுத்துவிடும்.. அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. கட்டண விவரமும் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
எனவேதான், மேற்கு மாவட்டங்களில், 1.02 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில், தென் மாவட்டங்களில், 80 லட்சம் மீட்டர்களும் பொருத்த, கடந்த மாதம் ஜுனின் துவக்கத்தில் தமிழக அரசு டெண்டர் கோரியது. ஆனால், கடந்த மாதம், இந்த டெண்டரை திடீரென ரத்து செய்து, மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது.
காரணம், டெண்டர் கோரப்பட்டதில், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பியதாம். அதனால்தான், அந்த டெண்டரை ரத்து செய்த மின்வாரியம், பிறகு, புதிய டெண்டரை கடந்த வாரம் கோரியிருந்தது... இந்நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து இணைப்புகளிலும் பொருத்த 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாம்.
ஸ்மார்ட் மீட்டர்: அதுமட்டுமல்ல, டெண்டரில் தேர்வுசெய்யப்படும் நிறுவனம், மீட்டர்களை பொருத்துவது, தகவல்தொடர்பு வசதியை ஏற்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பராமரிப்பது என அனைத்து பணிகளையும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது.. எனவே, எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications