டாஸ்மாக் சரவெடி.. தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் லீவு.. ஆனாலும் "ரிக்கார்டு" வைத்த குடிமகன்கள்! ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் ரிசல்ட் இன்று வெளியாகி வருவதால், டாஸ்மாக்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.. இதுகுறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது... லோக்சபா பாராளுமன்றத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்றைய தினம் எண்ணப்படுவதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

Tasmac shops Tamil Nadu lok sabha election result liquor sales

அந்தவகையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. இதையொட்டி, நாடு முழுவதும் முன்கூட்டியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள.. எனினும் இன்றைய தினம் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..

டாஸ்மாக்: தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும்நிலையில், விதியை மீறி யாராவது மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.. இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வந்ததால், நேற்று மாலையிலேயே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை களை கட்டியது.. டாஸ்மாக் பார்களில் மட்டுமின்றி ரோட்ரோரங்களிலும் குடிமகன்கள் மதுஅருந்தி கும்மாளமிட்டனர்.

வெற்றிகளிப்பு: அதுமட்டுமல்ல, இன்றிரவு வெற்றியை கொண்டாடுவதற்காகவும், அரசியல் கட்சியினர் மதுபாட்டில்களை நேற்றே வாங்கி குவித்துவிட்டார்களாம்.. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானதுமே, கட்சி கட்சி தொண்டர்கள் தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க போகிறார்களாம்.

குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திட்ட மிட்டுள்ளனர். இதற்காக மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்களாம்..

டபுள் மடங்கு: இதனிடையே, நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் ரூ.200கோடி அளவுக்கு மது மது விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தினமும் ரூ.80 கோடியில் இருந்து 100 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம்.. அதேபோல, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறும்.

ஆனால், நேற்று எந்தஒரு நிகழ்வுமே இல்லை.. திருவிழா போன்ற விழாக்களும் இல்லை.. சாதாரண நாள் என்றாலும், 2 மடங்காக மதுவிற்பனை உயர்ந்துவிட்டதாகவும், இதில், ரூ.200 கோடி வரை டாஸ்மாக்கில் விற்பனை நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+