மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. ஆன்லைனில் கரண்ட் பில் கட்டண வசதி.. மின் கட்டணம் வசூலில் வந்த குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மின்வாரியம் பல்வேறு வகைகளில் முனைப்பு காட்டி வருகிறது.. நுகர்வோர்களின் தேவையை கருத்தில் கொண்டு, மின்கட்டணம் செலுத்துவது உட்பட ஏராளமான நடைமுறைகளை எளிமைப்படுத்தியிருக்கிறது.. இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து வரவேற்பும் கிடைத்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஒரு சர்ப்ரைஸ் செய்தியை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. அது என்ன தெரியுமா?

மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செலுத்துவதற்கான வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது...

TNEB electricity board current bill

அதாவது, மின் கட்டணத்தை பராமரிப்பதற்கான ஒரு பிரத்தியேக நிறுவனம் தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் என்று கூறப்படும் TANGEDCO வை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியும்..

ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் ஆன்லைன் பேமெண்ட் செய்வதற்காக புதிதாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை... ரிஜிஸ்டர் செய்யாமலேயே குவிக் பே (Quick Pay) என்ற ஆப்ஷனை பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் கரண்ட் பில்லை செலுத்தலாம்..

கட்டணம் செலுத்தும் முறைகள்

மின் கட்டண வசூல் மையம், இ - சேவை மையம், சில அஞ்சல் நிலையங்களில், ரொக்கம், காசோலை, வரைவோலை என ஏதேனும் ஒன்றின் வழியாக மின் கட்டணம் செலுத்தலாம்.. இவைகளை தவிர, மின் வாரிய இணையதளம், மொபைல் போன் செயலி, கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றை உள்ளடக்கிய,'பாரத் பில் பே வாயிலாக, டிஜிட்டல் முறையிலும் கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைனிலேயே பணம் கட்டிவிடுவதால், நுகர்வோர்களுக்கு நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.. அந்தவகையில், ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது..

மாநிலம் முழுவதுமுள்ள 3.44 கோடி மின் நுகர்வோர்களில், வீடுகளின் எண்ணிக்கை, 2.45 கோடி. வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதுடன், 2 மாதங்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுக்கப்படுகிறது.. மேற்கண்ட இலவச மின்சார பயனாளிகளை தவிர்த்து, மாதம் சராசரியாக, 1 கோடி - 1.15 கோடி பேர் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்..

எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும்

ஆன்லைனில் "எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் மின் கட்டணத்தை செலுத்தலாம்" என்ற முறை பொதுமக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..

காரணம், முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதானால், வரிசையில் காத்திருக்க நேரிடும்.. இதற்கெனவே நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். சிலர் அலுவலகத்தில் லீவு போட வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.. கட்டணம் செலுத்தும்போது சில்லறை தட்டுப்பாடும் எழலாம்.

ஆன்லைன் வசதிகள்

ஆனால், ஆன்லைனில் கரண்ட் பில் கட்டும்போது, இதுபோன்ற சிக்கல்கள் எழுவதில்லை. நேரம் மிச்சமாகிறது.. இதன்காரணமாகவே, மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. மேலும் தற்போது அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் உள்ளதால், இந்த கட்டண முறை எளிதாகி விடுகிறது.

இதுகுறித்த புள்ளிவிவரத்தை மின்வாரியமே வெளியிட்டிருக்கிறது.. அதன்படி, கடந்த 2019 - 20ல் 11.78 கோடி பேர் மின் கட்டணம் செலுத்தியதால், 40,547 கோடி ரூபாய் வசூலானது. இதில் மின் கட்டண மையங்களில், 8 கோடி பேர், 22,100 கோடி ரூபாயும்; ஆன்லைனில், 3.75 கோடி பேர், 18,448 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளனர்.

100 சதவீதம் இலக்கு

நடப்பாண்டு 2024 - 25-ல் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியோர் எண்ணிக்கை, 9.56 கோடியாகவும்; வசூலான தொகை, 58,285 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே ஆண்டில், மின் கட்டண மையங்களில், 4.18 கோடி பேர், 10,408 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.

தற்போதைய சூழலில், மின் கட்டணம் செலுத்துவோரில், 70 சதவீதம் பேர் ஆன்லைனில் கட்டுவதால், 85 சதவீதம் மின் கட்டண வசூல் தொகை கிடைப்பதாகவும், விரைவில் இது, 100 சதவீதத்தை எட்டிவிடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+