"டிட்டோ" கருணாநிதி.. மதுரை ஸ்கூலில் ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா.. விடாத அந்த "வார்த்தை".. வாவ்

மதுரை ஆதிமூலம் பள்ளியில் பார்வையாளர் குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கையெழுத்து ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. என்ன கையெழுத்து அது?
பொதுவாக மாநில முதல்வர்கள் உத்தரவுகளை பிறப்பித்து விடுவதால், அவர்களின் கையெழுத்துக்கள் எப்படி இருக்கும் என்பதை பலரும் அறிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

ஆனால், இவர்கள் வெளியிடும் அறிக்கைகளில் கையெழுத்துக்கள் இடம்பெற்றிருப்பது கட்டாயமான ஒன்று.. அந்தவகையில் சில முதல்வர்களின் கையெழுத்துக்களை இந்த தமிழகம் பார்த்ததுண்டு.

ஆங்கிலம், தமிழில் புலமை பெற்ற அறிஞர் அண்ணாவின் கையெழுத்து எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் அறிய முடியாவிட்டாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஐந்து ரூபாய் நாணயத்தில் அறிஞர் அண்ணாவின் கையெழுத்து போட்ட நாணயங்களும் உள்ளது பெரும்பாலானோருக்கு தெரியவாய்ப்பு இல்லை...

 ரத்தத்தின் ரத்தங்கள்

ரத்தத்தின் ரத்தங்கள்

அண்ணாதுரை என்று தமிழில்தான் கையெழுத்து போட்டிருப்பார். அதேபோல எம்ஜிஆரின் கையெழுத்து, ரத்தத்தின் ரத்தங்களுக்கு அத்துப்படி.. எம்.ஜி.ராமச்சந்திரன் என்று முழுமையான பெயருடன் கையெழுத்து போட்டிருப்பார்.. ஜெயலலிதாவின் கையெழுத்தை அவ்வளவாக காண முடிவதில்லை.. ஆனால், அவரது உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஒருமுறை, ஜெயலலிதா அவருக்கு எழுதிய கடிதத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்..

 பச்சை கலர்

பச்சை கலர்

ஜெ.ஜெ என்று எழுதி, அதன் கீழ், க.பொ.செ (கழக பொதுச்செயலாளர்), முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் என்றே குறிப்பிடும் ஜெயலலிதா, பச்சை கலர் இங்க்கில் "அம்மா" என்று கையெழுத்து போட்டதை கண்ணீருடன் நினைவு கூர்ந்திருந்தார் பூங்குன்றன். அதேபோல, கருணாநிதியின் கையெழுத்து தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது.. இதயத்துக்கு நெருக்கமானது.. இவரது கையெழுத்தை இன்றைய பிள்ளைகள் நன்றாகவே அறிந்திருப்பார்கள்.. 2 வருடங்களுக்கு முன்பு கருணாநிதியின் கையெழுத்து ஒன்று வைரலானது..

 கருணாநிதி விசிட்

கருணாநிதி விசிட்

1959ம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏவாக கருணாநிதி இருந்திருக்கிறார்.. அங்குள்ள வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளியை ஆய்வு செய்வதற்காக கருணாநிதி வந்து போனாராம்.. வழக்கமாக எம்எல்ஏக்கள், அதிகாரிகள் இப்படி ஆய்வு செய்ய வந்தால், அது சம்பந்தமான குறிப்புகளை அங்குள்ள பதிவேடுகளில் எழுதி வைத்து போவது வழக்கம்.. அப்படித்தான் கருணாநிதி குளித்தலை எம்எல்ஏவும் எழுதி வைத்து போயுள்ளார்..

 உளுத்து போயின

உளுத்து போயின

அதில், "இன்று வேங்காம்பட்டி ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள்... மொத்த மாணவர்கள் 107ல், இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர்... இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப்போயிருக்கின்றன... அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம்.. ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொது மக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று" என்று எழுதியுள்ளார். கடைசியில், "மு. கருணாநிதி" என்ற பெயருக்கு பின்னாடி MLA (எம்எல்ஏ) என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் கையெழுத்து ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது என்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது.

 டிட்டோ கருணாநிதி

டிட்டோ கருணாநிதி

கிட்டத்தட்ட கருணாநிதியின் கையெழுத்தை ஒட்டி உள்ளது, இன்றைய முதல்வர் ஸ்டாலினின் கையெழுத்தும்.. மதுரை ஆதிமூலம் ஆரம்பப்பள்ளியில் "காலை சிற்றுண்டி" திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.. இன்று காலையிலேயே பள்ளிக்கு சென்ற ஸ்டாலின், அங்கு கிச்சனுக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. பிறகு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை ஊட்டிவிட்டு, சாப்பாடு நல்லா இருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டே ஊட்டியும் விட்டார். அவர்களுடன் உட்கார்ந்து சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.. இறுதியாக, அந்த பள்ளியை விட்டு கிளம்பும்போது, அங்குள்ள பார்வையாளர் குறிப்பில் கையெழுத்து போட்டு விட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்..

 திராவிட மாடல்

திராவிட மாடல்

அதில், "திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று தொடங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கைப்பட எழுதி கையெழுத்து போட்டுள்ளார்.. இந்த கையெழுத்தை பார்த்தால் அச்சுஅசல் கருணாநிதி கையெழுத்து போலவே இருக்கிறது.. ஸ்டாலினின் கையெழுத்திலும் "முத்தமிழ் அறிஞர்" உயிர்ப்புடன் நடமாடுவதை போலவே தெரிகிறது.. தமிழக அரசியலின் சாகாவரம் பெற்றுவரும் சத்துணவு திட்டத்தில், ஸ்டாலினின் கையெழுத்து கருப்பு கலரில் முத்திரை பதித்து கொண்டிருக்கிறது.. அத்துடன், "திராவிட மாடல்" என்ற வார்த்தையும் கம்பீரமாக பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+