டாஸ்மாக்கில் மெகா மாற்றம்.. இனி சமமான கொள்முதல்! கர்நாடக பாணியில் தனியார்மயமாக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்.. அதாவது டாஸ்மாக் தனது மதுபானக் கொள்முதல் நடைமுறையில் பல மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்தும் சமமான முறையில் பீர் மற்றும் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் செய்யும் புதிய நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

TASMAC

அத்துடன், டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களின் சேவையை மேம்படுத்தவும், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் மாதிரியைப் பின்பற்றி கடைகளை மொத்தமாக தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

அரசியல் செல்வாக்கிற்கு முற்றுப்புள்ளி

தமிழ்நாட்டில் தற்போது 11 மதுபான ஆலைகளும், 6 பீர் ஆலைகளும் இயங்கி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக, மாநிலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம், ஆளும் கட்சிக்கு நெருக்கமான குறிப்பிட்ட சில மதுபான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிக அளவில் ஆணை வழங்கி கொள்முதல் செய்யப்பட்டு வந்ததாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பழைய முறையால், குறிப்பிட்ட பிராண்டுகள் மட்டுமே கடைகளில் கிடைத்து வந்தன. இதனால், மதுப் பிரியர்களுக்குப் பிடித்தமான பிற பிராண்டுகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது சோதனை அடிப்படையில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது:

பீர் கொள்முதல்

மாநிலத்தில் உள்ள 6 பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சம அளவிலான கொள்முதல் ஆணைகள் பிரித்து வழங்கப்படுகின்றன.

சாதாரண வகை

மொத்த விற்பனையில் 70% பங்கைக் கொண்டுள்ள சாதாரண ரக மதுபானங்கள், 11 மதுபான ஆலைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதன் மூலம் சந்தையில் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் பல்வேறு வகையான பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உறுதி செய்யப்படுகிறது.

கர்நாடகா, தெலங்கானா பாணியில் கடைகள் தனியார்மயம்

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் போதிய சுகாதாரம் இன்மை, அடிப்படை வசதிகள் குறைபாடு, கட்டாயக் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மற்றும் சட்டவிரோதக் பார்கள் இயங்குவது போன்ற புகார்கள் நீண்டகாலமாக நிலவி வருகின்றன.

இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் வெற்றிகரமாகச் செயல்படும் மாதிரியைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

திட்டமிடப்படும் முக்கிய மாற்றங்கள்

கடைகள் டெண்டர் மற்றும் உரிமம் - கடைகள் மற்றும் பார்களைத் தனியாருக்கு ஏலம் அல்லது உரிமம் மூலம் வழங்கி, பராமரிப்பு மற்றும் சேவைப் பொறுப்புகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது.

உள்கட்டமைப்பு மேம்பாடு - நவீன வசதிகள், ஏசி வசதி, உணவருந்தச் சிறந்த சூழல் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளைப் பராமரிப்பதை உரிம நிபந்தனையாகக் கொண்டு வருவது. இந்த இரு முக்கிய முடிவுகளும் டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாகச் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது:

அரசியல் தலையீடின்றி வெளிப்படையான முறையில் கொள்முதல் நடப்பதால், அனைத்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் விற்பனை செய்ய முடியும்.

மதுப் பிரியர்களுக்குத் தேவையான பிராண்டுகள் எப்போதும் கடைகளில் கிடைப்பதுடன், பார்களின் சுகாதாரம் மற்றும் தரம் கணிசமாக உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+