"ரூட் கிளியர்".. சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்.. அறிவிப்பு.. இனிமே இப்படிதானாம்
அண்ணா ஆர்ச் பகுதியில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது
சென்னை: அண்ணா ஆர்ச் பகுதியில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை ஈவேரா சாலையானது, சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும்.. ஆனால் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்துகள் பெருகிவிட்டதால், எந்த நேரமும் டிராபிக் ஜாம் ஏற்பட்டு விடுகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பதை தவிர்க்க முடிவதில்லை..

மேம்பாலம்
அதனால்தான், ஈவேரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சில மாற்றங்களை போக்குவரத்து துறை செய்ய முடிவெடுத்துள்ளது.. இவ்வளவு காலம், கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற வாகனங்கள் அண்ணா ஆர்ச் அருகில் இடது புறமாக திருப்பி விடப்பட்டு இருந்தன.. அதாவது, மேம்பாலத்துக்கு கீழே சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் யூ திருப்பம் போட்டு மறுபடியும், பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

வரவேற்பு இல்லை
கடந்த 9-ந்தேதி அமல்படுத்தப்பட்ட இந்த மாற்றமானது, 10 நாட்கள் சோதனை ஓட்டம் முறையில் அமல்படுத்தப்படும் என்றும் போலீசார் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்... ஆனால் இந்த நடைமுறை 2 நாட்கள் மட்டும் அமலில் இருந்துள்ளது... காரணம், வாகன ஓட்டிகளிடம் இந்த மாற்றத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தரவில்லை.. எனவே, இந்த போக்குவரத்து மாற்றம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது..

அண்ணா ஆர்ச்
அதன்படி, நேற்று முதல் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் எப்போதும் போல நேராக செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அண்ணா ஆர்ச் பகுதியில் எப்போதும் போல அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன... இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சொல்லும்போது, "அண்ணா ஆர்ச் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றத்துக்கு போதிய வரவேற்பு இல்லை. அதனால் புதிய மாற்றத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவில்லை" என்றனர்..

திடீர் மாற்றம்
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் தற்போது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்தான் இப்படி ஒரு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.. தற்போது அதில் மாற்றம் இல்லை என்று அறிவித்துவிட்டதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications