நான் கேட்பேன்... பிக்பாஸ் வீட்டில் ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்.. மநீமவில் ஐக்கியமாகிறாரா ஆரி?
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைவது தொடரும் போல தெரிகிறது. இந்த முறை பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி மக்கள் நீதி மய்யத்தில் இணையக் கூடும் என தெரிகிறது.
பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்ற கவிஞர் சிநேகன் (சினேகன்), கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மநீமவில் ஆரி?
தமிழகம் முழுவதும் கமல்ஹாசனுடன் இணைந்து சிநேகனும் (சினேகன்) பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் தற்போது முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் நடிகர் ஆரியும் மநீமவில் இணைவதற்கான சாத்தியங்கள் உண்டு என கூறப்படுகிறது.

நேர்மையும் ஆரியும்
பிக்பாஸ் வீட்டில் நேர்மையை வலியுறுத்தி அதனால் பெரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு அதேநேரத்தில் மக்களிடத்தில் பெரும் ஆதரவை பெற்றவர் ஆரி. அவருக்கு ஆதரவாக பலமுறை கருத்துகளை முன்வைத்திருந்தார் கமல்ஹாசன்.

ஸ்கெட்ச் போட்ட கமல்
இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஆரி, பாலாஜியுடன் உரையாடிய கமல்ஹாசன், நான் கேட்பேன் என்பதை வெளியிலும் வந்து நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்படி கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதே தம்முடன் மநீமவில் பயணியுங்கள் என்பதை காட்டுவதாகவே இருந்தது.

விரைவில் ஐக்கியம்?
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆரியும் பிக்பாஸ் மேடையில், நீங்கள் எனக்கு முன்னுதாரணம்.. எனக்கு இப்போது கூடுதல் பொறுப்பு இருக்கிறது.. வெளியே சென்றும் நேர்மைக்காகவும் மக்கள் பிரச்சனைக்காகவும் குரல் கொடுப்பேன் என்றார். அனேகமாக வெகுசீக்கிரம் ஆரியும் மநீமவில் இணைந்து கமல்ஹாசனுடன் பிரசாரத்துக்கு வரக் கூடும் என தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications