கட்டில் மேல் லூட்டி.. வயசுக்கு மீறின பேச்சு.. திடீரென மனம் திருந்திய "குழந்தை".. ட்விஸ்ட் தந்த பாலா!
பிக்பாஸ் பாலாஜியின் உண்மையான குணநலன்கள்தான் என்ன
சென்னை: வயசுக்கு மீறின பேச்சு.. வயசுக்கு மீறின செயல்.. என திக்குமுக்காட வைத்த பாலாஜி, இன்று ஹீரோவாக உருவெடுத்து கொண்டிருப்பதை ஒருசிலர் ரசிக்கவில்லை என்றே சொல்லலாம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, ஆரம்பத்தில் இருந்தே தன் மீதான கவனத்தை பெற்று வருகிறார்.. இப்போது வரை பேசப்பட்டும் வருகிறார்.

தான் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே, எந்த எல்லைக்கும் சென்றதை இந்த 3 மாசத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது.. பாலாஜியை பொறுத்தவரை திறமையான இளைஞர்தான்.. ஆனால், தன்னிடம் உள்ள திறமையைவைத்து, வீட்டிற்குள் இருக்கும் ஆரி, ரியோவை ஜெயிக்க முடியாது என்ற சூட்சுமத்தை நன்றாக தெரிந்து வைத்து கொண்டார்.
அதனால்தான், வேற டிராக்கில் தன் விளையாட்டை ஆரம்பித்தார்.. இதற்காக ஷிவானியையும் பயன்படுத்தி கொண்டார்.. நெருக்கமாக பேசினார்.. ஷிவானியும் பதிலுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார்.. தலையை கோதிவிட்டார்.. அரவணைத்தார்.. ஆறுதலாக இருந்தார்..
எந்நேரமும் அந்த கட்டிலில் இவர்கள் 2 பேர் மட்டுமே விழுந்து கிடந்தனர்.. மற்ற போட்டியாளர்கள், இதனை கவனித்து கிண்டலடித்து பாட்டு பாடும்வரை சென்றபோதும், இந்த போக்கை பாலா மாற்றி கொள்ளவில்லை.. ஒருகட்டத்தில் போதுமான விளம்பரமும், டிஆர்பியும் ஷிவானியை வைத்து பெற்று கொண்டார்.. இறுதியில் நீ என் பிரண்டு மட்டும்தான் என்று கிளியராக சொல்லிவிட்டு நழுவி கொண்டார். இதுவும் பாலாவின் யுக்திதான்.
மென்மையான போக்கு இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் எடுபடாது என்பது ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறை.. அப்படித்தான் ஓரளவு முரட்டு சுபாவத்தை, ஓவர முரட்டு சுபாவமாக காட்டி கொண்டார் பாலா.. இதற்காக தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.. ஆரியுடனனான மோதல்களே இதற்கு சாட்சி.. நாகரீகமற்ற வார்த்தை, எல்லை மீறிய வார்த்தை, என எதையுமே விட்டு வைக்கவில்லை..
மூத்தவர்கள், நண்பர்கள் என்ற அணுசரணையும் இல்லாமல் நெருப்பு வார்த்தைகளை அள்ளி வீசினார்.. ஆனால், ஒவ்வொருமுறையும் பாலாவை கமல் கண்டித்தது என்னவோ குறைவு என்றே சொல்லலாம்.. இப்போது திடீரென ஒழுங்கானவராக மாறிவிட்டார் பாலா.. நாட்கள் நெருங்கிவிட்டது.. நேரம் முடிய போகிறது.. விளையாட்டு முற்று பெறுகிறது.
இந்த நேரத்தில் மென்மை போக்கு, நட்பு, அன்பு, பாசம், விட்டுத்தருதல், நெகிழ்ச்சி, இரக்கம், சமாதானம், பணிவு போன்ற பாசிட்டிவ் விஷயங்களுடன் தென்படுகிறார்.. இதை எப்படி எடுத்து கொள்வது.. அப்படியானால், இவ்வளவையும் உள்ளுக்குள் வைத்து கொண்டு, வெளியே வேஷம் போட்டுக் கொண்டிருந்தாரா? அல்லது இப்போது போட்டு கொண்டிருப்பது வேஷமா? தெரியவில்லை.
ஆனால், என் வீட்டில் என்னை சரியாக வளர்க்கவில்லை, வீட்டு சூழல் சரியில்லை, அதனால்தான் நான் இப்படி" என்று பாலாஜி அன்று சொன்ன காரணத்தை இப்போது ஏற்கவே முடியவில்லை.. இவர் மனம் மாறி வெளியே செல்கிறாரா? அல்லது நாம்தான் மனம் மாறிவிட்டோமா? தெரியவில்லை.. மொத்தத்தில் இந்த 3 மாசமாக நம் தலையைதான் இந்த பாலாஜி பிய்த்து கொள்ள வைத்துவிட்டார்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications