87 பெண்கள் பலாத்காரம்.. 6,000 மணிநேர உல்லாச வீடியோ.. கோர்ட்டில் அம்பலமான டாக்டரின் அந்தரங்கம்.. ஐயோ
சென்னை: டாக்டர் ஒருவர், மொத்தம் 87 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறாராம்.. அதுவும் 20 வருடங்களில்.. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பாலியல் வழக்காக இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்து, பலருக்கும் திகைப்பையும், அதிர்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது.
ஐரோப்பியாவின் நோர்வேயை சேர்ந்தவர் ஆர்னே பை.. இவருக்கு 55 வயதாகிறது.. முன்னாள் கிராம மருத்துவர் ஆவார்.. பெண்கள் விஷயத்தில் பலவீனமான ஆர்னே, பலரை திட்டமிட்டு குறிவைத்து அவர்களின் வாழ்வை சீரழித்துள்ளார்.

மருத்துவ பயிற்சி: டாக்டராவதற்கு முன்பு, தன்னுடைய மருத்துவ பயிற்சியின்போதிருந்தே, பல பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. அந்தவகையில், மொத்தம் 94 பெண்கள் இவரது வக்கிரத்தில் வீழ்ந்துள்ளனர். இதில், 87 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறாராம்.. பெரும்பாலும் அனைவருமே, சிகிச்சைக்காக இவரிடம் வந்த நோயாளிகள் ஆவர்.. அனைவருமே 14 வயதில் இருந்து 67 வயதுக்குட்பட்டவர்கள்.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம்தான் இந்த டாக்டரின் வண்டவாளம் வெளியே தெரிந்துள்ளது. டாக்டர் ஆர்னே பை மீது சுகாதாரத்துறை அதிகாரிகளே புகார் தந்துள்ளனர்.. இதையடுத்து போலீசார் விசாரணை ஆரம்பமானது..
வீடியோக்கள்: 6,000 மணிநேர டாக்டரின் அந்தரங்க வீடியோ பதிவுகளையும் போலீசார் விசாரணையில் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.. அனைத்து வீடியோக்களும், இவரிடம் வந்த நோயாளிகளுடையது.. அவர்களின் அனுமதியின்றி, அனைத்து அந்தரங்க வீடியோக்களையும் எடுத்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அந்தரங்க மகளிர் மருத்துவ பரிசோதனைகளின்போதும், இந்த வீடியோவை டாக்டர் திருட்டுத்தனமாக எடுத்திருக்கிறார்.
தற்போது இந்த வழக்கு மருத்துவத்தொழிலில் உள்ள நம்பிக்கையின் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்துவதாக கூறி,பரவலான கண்டனத்தை பெற்று வருகிறது.. நீதிமன்றம் வரை தற்போது வழக்கு சென்றுள்ளது. எப்படியும் டாக்டருக்கு அதிகபட்சமாக 21 வருடங்கள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எப்போது தண்டனை வழங்கப்படும் என்று தெரியவில்லை.
தண்டனை : டாக்டரின் குற்றச்சாட்டுகள் அனைத்துமே தீவிரமாக இருந்தபோதிலும், கடந்த 2023ல் அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரை அவர் தன்னுடைய பதவியில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. இப்போதும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறதாம்.. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த, 87 பெண்களை பலாத்காரம் செய்த இந்த வழக்குதான், ஐரோப்பாவிலேயே மிக மோசமான பாலியல் வழக்காக கருதப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications