விஜய் நல்ல நியாயமா பேசியிருக்கிறார்.. திமுக வரவேற்பு
Recommended Video
சென்னை: நடிகர் விஜயின் கருத்துக்கள் நியாயமானவை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
பிகில் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், சுபஸ்ரீ மரணம் உள்ளிட்ட சில தமிழக நடப்பு குறித்து பேசினார். ஆளும் அரசை கண்டிக்கும் தொனியில் அவரது பேச்சு இருந்தது.

இதுகுறித்து, டிவி சேனலிடம் பேசிய தங்கத்தமிழ் செல்வன் கூறியதாவது: சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பிளக்ஸ் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. மாநில அரசின் அவல நிலையை தைரியமாக சொல்லியதற்கு விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கேயுமே பிளக்ஸ் மற்றும் கட்அவுட்கள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, முப்பெரும் விழாவையொட்டி திருவண்ணாமலையில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்கள் முற்றிலும் அகற்றப்பட்டது. இப்படித்தான் ஒரு தலைமை இருக்க வேண்டும். ஆனால் சம்மந்தம் இல்லாமல், அடுத்தவர் மீது நடவடிக்கை எடுப்பது தேவையற்றது.
இதைத்தான் வெளிப்படையாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதை வெளிப்படையாக சொன்னதை நான் வரவேற்கிறேன். அரசு செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கக் கூடிய துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது என்பதற்காக நான் பாராட்டுகிறேன். இவ்வாறு தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்!












Click it and Unblock the Notifications