கழுதை தேய்ந்து கட்டெறும்பானதே! பாதாளத்தில் பாயும் காங்கிரஸ் செல்வாக்கு! என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று விடலாம்.. ஆட்சியில் பங்கு கேட்கலாம் என எதிர்பார்த்து இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்திருக்கிறது. பீகார் தேர்தலால் தமிழகத்திலும் அந்த கட்சிக்கான எம்எல்ஏ சீட்டுகளின் எண்ணிக்கை கேள்விக்குறியாக இருக்கிறது. 10 சீட்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என திமுகவினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். என்ன முடிவு எடுக்கப் போகிறது திமுக தலைமை? என்பதுதான் தற்போதைய கேள்வி.

பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்ற முழக்கத்தோடு இந்தியா முழுவதும் யாத்திரை மேற்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. ஆனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வியே மிஞ்சியது. இந்தியா கூட்டணி என மிகப் பெரிய கூட்டணியை அமைத்திருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸுக்கு எதிரியாக கூட்டணி கட்சிகளே இருந்தன.

உதாரணத்திற்கு கேரளாவில் கம்யூனிஸ்ட்டை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டது. தமிழகத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்டும் திமுக கூட்டணியில் இருந்தன. டெல்லியிலும் இதே நிலைதான். பஞ்சாபில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி காங்கிரஸ் உடன் கூட்டணி சேர மறுத்தது.

mk stalin dmk congress

பீகார் தாக்கம்

இப்படியாக பொருந்தா கூட்டணியாகவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பார்க்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை பாஜக ஜேடியூ கூட்டணி வென்றது. ஆர்ஜேடி -காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளுக்குள் சுருங்கி போனது. ஆரம்பத்திலேயே ஆர்ஜேடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முட்டல் மோதல் தான். 61 தொகுதிகளை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

காங்கிரஸ் தோல்வி

அதிலும் ஏழு தொகுதிகளில் ஆர்ஜேடி வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பீகாரில் ஏற்பட்ட தோல்வி தமிழக காங்கிரஸ்க்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. இந்த முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், பீகாரில் வாங்கிய அடி தமிழகத்திலும் எதிரொலித்திருக்கிறது. காங்கிரசுக்கு மொத்தமாகவே பத்து தொகுதிகளை தான் ஒதுக்க வேண்டும் என்கின்றனர் திமுக ஆதரவாளர்கள்.

திமுக கூட்டணி

அதிக தொகுதிகளை ஒதுக்கினால் அது அதிமுக கூட்டணிக்கு சாதகம் ஆகிவிடும் என்ற கூற்றை முன்வைக்கின்றனர். உண்மையில் அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம்தான். காரணம் எப்போதெல்லாம் காங்கிரஸ் அதிக தொகுதிகளை மாநில கட்சிகளிடம் கேட்டுப் பெறுகிறதோ அப்போதெல்லாம் பலத்த அடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை 1996 சட்டசபை தேர்தலில் 64 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2011 தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் மட்டுமே வென்றதோடு ஒரு தொகுதியில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது.

திமுக முடிவு

2016ல் 41 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்றது. 2021ல் திமுக தலைவராக முதல் தேர்தலை சந்தித்த ஸ்டாலின் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரசுக்கு தொகுதிகளை குறைத்து கொடுத்தார். 60 தொகுதிகளை காங்கிரஸ் கேட்ட நிலையில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில் 18 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. எனவே குறைவான தொகுதிகளை கொடுத்தால் காங்கிரஸ் அதிகமாக ஜெயிக்கும் என்ற பேச்சு தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் காங்கிரசுக்கு 125 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

முக ஸ்டாலின்

அமைச்சரவையில் பங்கு கேட்போம் துணை முதல்வர் பதவி எனவும் பேசி வருகின்றனர். இது திமுக தலைமையை ரசிக்க வைக்கவில்லை. இடையில் கேஎஸ் அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராஜேஷ் குமார், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட தலைவர்கள் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்போம் இல்லையென்றால் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைப்போம் என பேசி வந்தனர். இந்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் காங்கிரஸின் செல்வாக்கு படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. 30 தொகுதிகளை கேட்டாலே தர முடியாது என்ற நிலைக்கு திமுகவினர் சென்று விட்டனர். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் கடந்த ஆண்டு போல கடந்த தேர்தலை போல 25 தொகுதிகள் தான் தரமுடியும் என திமுக கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் காங்கிரஸ் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+