1997ல் பிறந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம்.. பீகாரின் அரசியலை மாற்றி அமைத்த லாலு! ஆர்ஜேடியின் அரசியல் வரலாறு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் இருட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் என்.டி.ஏ. கூட்டணியே ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருந்த நிலையில், அது உண்மைதான் என்பது தெரிந்துவிட்டது. அதே நேரத்தில் பீகார் அரசியலை மாற்றியமைத்த ஆர்ஜேடி எனப்படும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த கட்சியின் வரலாறு என்ன? பீகார் அரசியலில் மிகப்பெரிய ஆளுமையான லாலு பிரசாத் யாதவ் மாநிலத்தை எத்தனை முறை ஆண்டார்? என்பது குறித்து பார்க்கலாம்..

பீகார் அரசியலில் லாலு பிரசாத் யாதவ் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல, அது ஒரு பெரிய அரசியல் மாற்றம் ஏற்படுத்திய அலை என்றே கூறலாம். 1997-ஆம் ஆண்டு ஜனதா தள் கட்சியிலிருந்து பிரிந்து அவர் உருவாக்கிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) அம்மாநில அரசியலையே மாற்றி பெரும் சக்தியாக மாறியது.

அதற்கு முன்னதாக அதாவது 1990 முதல் 1977 வரையிலான காலகட்டங்களில் லாலு பிரசாத் யாதவ் ஜனதா தள் கட்சி ஆட்சியில் முதலமைச்சராக இருந்தார். குறிப்பாக 1990 மற்றும் 1995 பீகார் சட்டமன்ற தேர்தல்களில் ஜனதா தளம் கட்சி தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க லாலு பிரசாத் யாதவ் முக்கியமானவராக இருந்தார்.

Bihar Election Results 2025

லாலு பிரசாத் யாதவ்

அதற்கு பிறகு தான் ஜனதா தள் கட்சியில் இருந்து விலகி 1997ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியை ஆரம்பித்தார். அதற்கு அந்தக் கட்சியின் தேர்தல் வரலாறு எப்படி இருந்தது? எந்தெந்த ஆண்டுகளில் வெற்றி, எந்தெந்த ஆண்டுகளில் பின்னடைவு? என்பதை பார்ப்போம். 1997ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஆர்ஜேடி, தனது முதல் பெரிய தேர்தலாக 2000 பீகார் சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது 324 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 124 இடங்களை கைப்பற்றி, ஆர்ஜேடி மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக திகழ்ந்தது.

ராப்ரி தேவி ஆட்சி

அப்போது லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தல் தான் பீகாரில் ஆர்ஜேடியை பீகார் அரசியலில் முழுமையாக நிலைநிறுத்தியது என்றே கூறலாம். ஆனால் அதற்கு பின்னர் 2005ம் ஆண்டில் அரசியல் சுழல்கள் கட்சிக்கு பெரிய சவாலாக மாறின. பிப்ரவரி 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 75 இடங்களை வென்றாலும், எந்தக் கூட்டணியும் பெரும்பான்மையைப் பெறவில்லை.

ஆர்ஜேடி வரலாறு

மாநிலத்தில் நிலையான அரசு உருவாகாததால் சட்டசபை கலைக்கப்பட்டு அக்டோபரில் மறுதேர்தல் நடத்தப்பட்டது. மறுதேர்தலில் ஆர்ஜேடி வெறும் 54 இடங்களையே பெற்றது. இப்போது பிகார் அரசியல் ஐக்கிய ஜனதா தள் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தடு. 2010 தேர்தல் முடிவுகள் ஆர்ஜேடிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. அப்போது அந்த கட்சி வெறும் 22 இடங்களில் மட்டுமே பெற்றது. அந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்,டி.ஏ. மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பிகார் அரசியல்

ஆனால் 2015-ல் பிகார் அரசியல் மறுபடியும் பெரிய திருப்பம் கண்டது. பாஜகவை தவித்து ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தள், காங்கிரஸ் ஆகியவை இணைந்து உருவாக்கிய மகாகட்பந்தன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தத் தேர்தலில் ஆர்ஜேடி 80 இடங்கள் பெற்று மாநிலத்தின் 'தனிப் பெருங்கட்சி'யாக உருவெடுத்தது. இந்த வெற்றி லாலுவின் மகன் தேஜச்வி யாதவின் அரசியல் எழுச்சிக்கும் முக்கிய தருணமாக அமைந்தது.

என்.டி.ஏ கூட்டணி

2020 சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி மீண்டும் வலுவான போட்டியை அளித்தது. 75 இடங்களை வென்றாலும், என்.டி.ஏ. மிக குறைந்த வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், அந்தத் தேர்தலில் ஆர்ஜேடி மாநிலத்தின் மிகப்பெரிய தனிக் கட்சியாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

பீகார் தேர்தல் 2025

2025 தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், என்.டி.ஏ.க்கு சாதகமாக இருந்தாலும், உண்மையான மக்களின் முடிவு என்ன? பிகார் அரசியலில் அது என்ன வகையான மாற்றத்தையும் உருவாக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஒருபுறம் ஆர்ஜேடி பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருந்தாலும், பீகார் அரசியலின் முக்கியமான மையப் புள்ளிகளில் ஒன்றாக இன்னும் திகழ்கிறது. லாலு பிரசாத் யாதவின் அரசியல் செல்வாக்கும், தேஜஸ்வியின் புதிய தலைமையும், இந்த தேர்தலில் மட்டுமல்ல, ஆர்ஜேடியை அடுத்த தேர்தலிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகவே வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+