பீகார் தேர்தல் முடிவு! தவெகவிற்கு அடித்த எச்சரிக்கை மணி.. விஜய்க்கு வந்த பெரிய சிக்கல்! சுதாரிப்பாரா

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதும் தேர்தலில் புதிதாகக் களமிறங்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளன. காரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினர் முன்னிலை வகிக்கின்றனர். பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 136 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.

பீகாரில் காங்கிரஸ் கட்சி தற்போது பலவீனமாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணி 70 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பீகாரில் இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களித்து உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் பின்னடைவு

பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி (ஜேஎஸ்பி) 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஜன் சுராஜ் சார்பாக கர்கஹர் தொகுதியில் ரித்தேஷ் ரஞ்சன் மட்டும் முன்னிலை வகிக்கிறார். பிரஷாந்த் கிஷோர் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் பிரஷாந்த் கிஷோர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bihar election results gives a massive lesson to teach for the TVK party and Vijay

பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகும் நிலை கூட இதனால் ஏற்படலாம். இது அரசியல் வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இது ஒரு பெரிய பாடமாக அமையும் என்கிறார்கள். பிரஷாந்த் கிஷோர் விஜயின் அரசியல் வியூக நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சிறந்த தேர்தல் வியூக நிபுணராக ஒரு காலத்தில் அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர், தனது கட்சியை மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கினார். சாலைப் பேரணிகள், சமூக ஊடகப் பிரசாரம் என அனைத்திலும் அதிரடி காட்டினார். ஆனால், இந்த பிரபலத்தை, வசீகரத்தை அவர் வாக்குகளாக மாற்ற ஜேஎஸ்பி தவறிவிட்டது.

பிகே வீழ்ச்சிக்கு காரண

இதற்கு பல காரணங்களை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலவீனமான அடித்தளக் கட்டமைப்பு, உள்ளூர் தலைவர்களின் பற்றாக்குறை, வலுவான சாதி ஆதரவு இல்லாதது, மற்றும் சரியான கூட்டணி வியூகம் இல்லாதது போன்றவை ஜேஎஸ்பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

பீகார் வாக்காளர்கள் பெரும்பாலும் ஜேடியூ, பாஜக, மற்றும் ஆர்ஜேடி போன்ற நன்கு அறிமுகமான கட்சிகளுக்கே தங்கள் வாக்குகளை அளிக்கின்றனர். ஒரு புதிய, சோதிக்கப்படாத கட்சிக்கு வாக்களிப்பது வீணான வாக்கு என்று பலர் உணர்கின்றனர்.

இதேபோன்ற சவால் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் காத்திருக்கலாம். இங்கு திமுகவும், அதிமுகவும் பல ஆண்டு கால அமைப்பு ரீதியான பலத்தையும், விசுவாசமான வாக்காளர் தளத்தையும் கொண்டுள்ளன. எனவே, தவெக தனது முதல் பெரிய தேர்தலை எதிர்கொள்ளும்போது பீகார் தேர்தல் முடிவுகள் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

வலுவான களம் தேவை

விஜய்யின் கட்சி வலுவான கள அணியை உருவாக்க வேண்டும், பூத் நிலை ஊழியர்களைச் சார்ந்து செயல்பட வேண்டும், மேலும் தனது ரசிகர் பட்டாளத்தையோ, நட்சத்திர பிம்பத்தையோ மட்டும் நம்பி இருக்கக் கூடாது என வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும், தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தவெக இல்லை. இது 2026 தேர்தல்களில் அதன் அங்கீகாரத்தையும், வாக்குச் சின்னத்தையும் பாதிக்கலாம். இது போன்ற நடைமுறை சிக்கல்களையும் தவெக கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு, வெறும் பிரபலத்தால் மட்டும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்பதைக் காட்டுகிறது. வாக்காளர்கள் ஆழ்ந்த உள்ளூர் தொடர்புகள், நம்பிக்கை மற்றும் முறையான கட்சி அமைப்பையே எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இந்த பீகார் எக்சிட் போல் முடிவு ஒரு சரியான நேரத்தில் கிடைத்த அரசியல் அறிவுரை என்று கூட சொல்லலாம். அரசியல் என்பது வெறும் விளம்பரத்தால் அல்ல, கடினமான களப் பணியால்தான் இயங்குகிறது என்பதை உணர்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+