பீகார் தோல்விக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை! அது முழுக்க முழுக்க! காங்கிரஸ் நிர்வாகி அட்டாக்
சென்னை: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அனைத்து தூண்களும் காம்பரமைஸ் ஆகிவிட்டது. தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு வேலை செய்தது என காங்கிரஸ் நிர்வாகி ஆலிம் அல் புகாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும் என்றும், பீகார் தேர்தல் தோல்வி என்பது ஜனநாயகத்தின் தோல்வி. பீகாரில் ஏற்பட்ட தோல்விக்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இல் வெற்றி பெற்று அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்த சூழலில் பாஜக வெற்றி பெற தேர்தல் ஆணையம் உழைத்ததாகவும், பீகார் தேர்தல் காங்கிரசின் தோல்வி அல்ல.. ஜனநாயகத்தின் தோல்வி எனவும் வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணியின் துணைத் தலைவருமான ஆலிம் அல் புகாரி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பஹல்காமில் அட்டாக் நடந்து மக்கள் ரத்தக்கறையோடு கிடக்கும் போது கூட, பீகாரில் தேர்தல் நடக்கின்றது என்பதால் அங்கு சென்று மோடி அழுகிறார். இந்த மாதிரியெல்லாம் எங்களால் பண்ண முடியாது. தேர்தலை தேர்தலாக சந்திக்கிறோம். ஜனநாயகத்தை ஜனநாயகமாக பார்க்கிறோம். ராகுல் காந்தியை ஜனநாயகத்தின் தலைவராக பார்க்கிறோம்.
இந்த அரசியில் அமைப்பு சட்டத்தின் அனைத்து தூண்களும் காம்பிரமைஸ் ஆகிவிட்டார்கள். மத்திய புலனாய்வு முகமையாக இருக்கட்டும், நீதிமன்றங்கள் கூட ஒரு சில நேரங்களில் மக்களின் நம்பிக்கையை இழக்கும் சூழல் வந்துவிட்டது. பிரபல பத்திரிக்கை ஒன்றே காங்கிரசுக்கு எதிராக செயல்படுகிறது. இப்படி எல்லாரையும் காம்பிரமைஸ் பண்ணிட்டாங்க.. கடைசியாக இருந்தது தேர்தல் ஆணையம். அதுவும் போயிருச்சு.. அதிலும் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எல்லாம் சுத்தம்.. முழுக்க நனைந்ததற்கு பிறகு எதற்குங்க முக்காடு என்கிறது போல ஆகிட்டாரு..
இப்படி இருக்கும் சூழலில் பீகாரில் ஏற்பட்ட தோல்வி என்பது ஜனநயகத்தின் தோல்வி தான். பீகார் தோல்விக்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
பீகாரில் நடந்தது போன்று எஸ்.ஐ.ஆரை அனுமதித்தால் இதே நிலைமை தான் நடக்கும். இப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
பீகாரில் என்ன உள் கட்டமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. பாஜக தலைவர்கள் யாராவது சொல்லி கேட்டு இருக்கீங்களா.. இப்போது பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதுக்கு பூரண மதுவிலக்கை செயல்படுத்தியது தான் காரணம் என சொல்கிறார்கள். ஆனால் பூரண மதுவிலக்கு இருக்கும் இங்கே தான் 28 பேர் இறந்துவிட்டார்கள். ஆனால் இதற்கு ஒரு பதிலோ, பொறுப்புணர்ச்சி கூட செய்யவில்லையே ஏன்.. என்று கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications