Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல முதல்வர்களை உருவாக்கிய கிங் மேக்கர்.. விஜய் ஸ்டைலில் இறங்கிய பிரஷாந்த் கிஷோருக்கு.. பெரிய 0!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் வியூகவாதியிலிருந்து முழு நேர அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரின் "ஜன் சுராஜ்" கட்சி பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கட்சி எந்த மாதிரியான அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வி அடைந்து உள்ளது.

காலையில் இருந்து ஜன் சுராஜ் சார்பாக கர்கஹர் தொகுதியில் ரித்தேஷ் ரஞ்சன் மட்டும் முன்னிலை வகித்தார். பின்னர் அவரும் தொகுதியில் தோல்வி அடைய.. மொத்தமாக ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெல்லாமல் தோற்றது. பிரஷாந்த் கிஷோர் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் பிரஷாந்த் கிஷோர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்தது. 122 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் 205 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 92 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 84 இடங்களிலும் வென்றுள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 23 இடங்களில் வென்றுள்ளது. இந்த கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பிரஷாந்த் கிஷோர்

பீகாரில் தனது முதல் தேர்தலை கொண்ட பிரசாந்த் கிஷோரின் "ஜன் சுராஜ்" இயக்கம் இதன் மூலம் படுதோல்வி அடைந்து உள்ளது. தீவிர அரசியல் ஆலோசகரான இவர்.. பல மாநில மாநிலங்களில் கட்சிகள் வெற்றிபெற காரணமாக இருந்த கிங் மேக்கர். மாநிலம் தழுவிய பதயாத்திரையாகத் தொடங்கிய இந்த இயக்கம், அடிமட்ட மக்களின் பங்களிப்பு, நலத்திட்ட அடிப்படையிலான வாக்குறுதிகள் மற்றும் "புதிய அரசியல் கலாச்சாரம்" என்ற பிரசாந்த் கிஷோரின் முழக்கத்துடன் வளர்க்கப்பட்டாலும் படுதோல்வி அடைந்துள்ளது..

மக்களின் அதிருப்தியிலிருந்து பிறந்த ஒரு இயக்கம்

பிரசாந்த் கிஷோர், தனது தொழில்முறை அரசியல் ஆலோசகர் பணியிலிருந்து விலகிய பிறகு, மே 2022-ல் "ஜன் சுராஜ்" இயக்கத்தை தளமாகத் தொடங்கினார். பெரும்பாலும் இளைஞர்களை குறி வைத்து இந்த இயக்கத்தை தொடங்கினார். பாரம்பரிய கட்சிகளின் கட்டமைப்பைத் தாண்டி, பீகாருக்கு ஒரு புதிய ஆட்சி மற்றும் தலைமை தேவை என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

இந்த இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில், பீகாரில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் பாதயாத்திரை மேற்கொள்ள அவர் உறுதியேற்றார். 4,000 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்த இந்த பாதயாத்திரை, பிரச்சாரத்தின் மையமாக அமைந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான கிராமவாசிகள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து அளவிலான ஊழியர்களை அவர் சந்தித்தார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மாற்று குரலாக பிரசாந்த் கிஷோர் தன்னை முன்னிறுத்தியதால், இந்த இயக்கம் இயற்கையாகவே வளர்ந்தது என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியக் கருத்துக்களும் செய்தியும்

மோசமான ஆட்சி, தென் மாநிலங்களுக்கு பீகாரிகளின் புலம்பெயர்வு, வேலையின்மை மற்றும் அடுத்தடுத்த அரசுகள் பீகாரின் திறனைப் பயன்படுத்தத் தவறியது போன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து ஜன் சுராஜ் இயக்கம் முன்னிலைப்படுத்தி வருகிறது. அரசியல் என்பது மக்களின் வளர்ச்சியை விட்டுவிட்டு, அதிகார நிர்வாகமாக மாறிவிட்டதால்தான் பீகார் அடிப்படை குறியீடுகளில் பின்தங்கியுள்ளது என்று கிஷோர் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இயக்கம் தலைவர்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். தலைவர்கள் அல்ல, மக்கள்தான் ஆட்சி முன்னுரிமைகளை வடிவமைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஜன் சுராஜ் அளித்த வாக்குறுதிகள்

இந்த இயக்கம் தேர்தல் அரசியலை நெருங்க நெருங்க, ஜன் சுராஜ் கட்சியின் முக்கிய கொள்கைகளாக அமையும் பல வாக்குறுதிகளை கிஷோர் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

சிறந்த நிர்வாகம்: வெளிப்படையான நிர்வாகம், டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஊழலுக்கு கடுமையான நடவாடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது.

தொழில் வளர்ச்சி: இளைஞர்கள் மற்ற மாநிலங்களுக்குப் புலம்பெயர்வதைத் தடுக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது.

கல்வி சீர்திருத்தம்: அரசுப் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் கற்றல் முடிவுகளை மேம்படுத்துதல்.

சுகாதார மறுசீரமைப்பு: நவீனமயமாக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் அதிக மருத்துவர்கள் மற்றும் வலுவான மருத்துவ உள்கட்டமைப்பு.

வேளாண் ஆதரவு: சிறந்த குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அமலாக்கம், நீர்ப்பாசன சீர்திருத்தங்கள், பண்ணை சார்ந்த பதப்படுத்தும் அலகுகள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு.

நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வளர்ச்சி: நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், வடிகால் மற்றும் சுத்தமான குடிநீர்.

இளைஞர் வேலைவாய்ப்பு: கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கான சலுகைகள்.

பஞ்சாயத்து அளவிலான அதிகாரம்: கிராம மட்டத்தில் அதிக நிதி மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குதல், நிர்வாகத்தை விரைவாகவும், பதிலளிக்கும் விதமாகவும் மாற்றுதல்.

அரசியல் களத்திற்குத் தயாராகுதல்

பாதயாத்திரை முடிந்த பிறகும், வலுவான மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்ட பின்னரே ஜன் சுராஜ் மாநில அரசியலில் நுழையும் என்று கிஷோர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி ருந்தார். பின்னர் மஞ்சள் கலர், அம்பேத்கார், காந்தி புகைப்படங்களுடன் கட்சி தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக, இந்த இயக்கம் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் தலைமைத் தேர்வுக்கான பயிற்சிகளைத் தொடங்கி, பல தீவிர பணிகளை செய்து அதன்பின் தேர்தலில் நின்றது.

எத்தனை இடங்களில் போட்டி?

இந்த தேர்தலில் 238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது. தனித்து நின்ற அந்த கட்சி சார்பாக பிரஷாந்த் கிஷோர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கட்சி எந்த மாதிரியான அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோல்வி அடைந்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+