கடைசி நேரத்தில் மோடியின் பிரம்மாஸ்திரம்.. பெண்களுக்கு ரூ.10000.. பீகாரில் தாக்கத்தை தந்ததா எஸ்ஐஆர்?
சென்னை: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 35 இடங்களை வெல்லவே திணறிய ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸின் மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த பீகார் தேர்தல் குறித்து அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான அய்யநாதன் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
Tamil Niram என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், எஸ்ஐஆர் திருத்தம் என்பது, எந்த அளவுக்கு ஜனநாயகத்தை பாதிக்கும் என்பதற்கும், கடைசி நேரத்தில் 1 கோடி பெண்களுக்கு மோடி தரப்பில் 10 ஆயிரம் செலுத்தப்பட்டதும்,

இதுபோக அவர்கள் ஏற்கனவே செய்யக்கூடிய இவிஎம் மோசடிகளும் என அனைத்தும் சேர்த்து, மக்களின் தீர்ப்பை மாற்றியமைத்துவிடும் என்பதற்கு மிகப்பெரிய அத்தாட்சிதான் இந்த பீகார் தேர்தல் முடிவு.. இந்த முடிவை நோக்கிதான் அவர்கள் செயல்பட்டார்கள்..
10 ஆயிரம் ரூபாய் அறிவித்த மோடி
10 ஆயிரம் ரூபாயை, செப்டம்பர் 26ம் தேதிதான் அறிவித்தார்.. இன்ஸ்டால்மென்ட்டில் பணம் போடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அதற்கு பிறகுதான் தேர்தலையே அறிவிக்கிறார்கள்.. இப்படி பல மாநிலங்களில் நடந்துள்ளது.. மோடி ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டால், உடனே தேர்தல் ஆணையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும்..
அடுத்ததாக எஸ்ஐஆர் திருத்தத்தின்படி, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள், 22 லட்சம் பேர் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம் தகவல் வந்தது.. ஆனால் எத்தனை பேர் அந்த நேரத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள் என்ற தகவல் வந்ததா? வரவே இல்லை.
பிறகு இறந்தவர்களில் பலர் உயிருடன் இருப்பதாகவும், தகுதியுள்ள பலரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தை நாடியதுமே, மீண்டும் ஆதார் கார்டின் அடிப்படையில் மறுபதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அப்போது 21 லட்சத்து 53 ஆயிரம் பேர் மீண்டும் வாக்காளர்கள் ஆனார்கள்.. அதிலும் 3 லட்சத்து 6000 பேர் நீக்கப்பட்டார்கள்..
அதிர்ச்சி சாதனை பாஜக
ஆக, 7 கோடியே 89 லட்சம் இருந்த பீகாரில், இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முதல் வரைவு பட்டியல் வெளியிடும்போது 7.24 கோடியாகவும், நீதிமன்ற தலையிட்டால் மறுசேர்க்கை நடந்தபோது 7.42 கோடியாகவும் உயர்ந்தது. அந்தவகையில் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது..
இந்த முறை அதிர்ச்சி தரத்தக்க ஒரு மாபெரும் மோசடி சாதனையை தேர்தல் ஆணையத்துடன் மோடி தரப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் 72 லட்சம் பெண்கள் மட்டுமே ஓட்டு போட்டிருக்கிறார்கள்.. இத்தனைக்கும் பெண்களின் வாக்குகள் நிறைய நீக்கப்பட்டுள்ளது.. முதல்கட்ட தேர்தலில் வாக்களித்த ஆண்களின் எண்ணிக்கை 1 கோடியே 97 லட்சம்.. பெண்கள் 1 கோடியே 75 லட்சம் ஆகும்..
ஓட்டுக்கு ரூ.10000
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் ஆண்கள் 1 கோடியே 95 லட்சம், பெண்கள் ஒரு கோடியே 25 லட்சம்.. அப்படியானால் இந்த 2 கட்ட வாக்குப்பதிவுகளில் 42 லட்சம் ஆண் வாக்காளர்கள் பெண்களை விட அதிகமாகும். அப்படியிருந்தும்கூட பெண்களின் சதவீதம் 72, ஆண்களின் சதவீதம் 62 ஆகும்.
இத்தனைக்கும் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் நீக்கப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினரும் புகார் செய்தார்கள். ஆனால் அதையும் தாண்டி பெண்கள்தான் அதிகம் வாக்களித்துள்ளனர்.. காரணம், மோடி தரப்பு தந்த ரூ.10000
வறுமையும், வறட்சியும் தாண்டவமாடும் பீகார் போன்ற மாநிலங்களில் 10 ஆயிரம் என்பதெல்லாம் மிகப்பெரிய தொகையாகும்.. அங்குள்ள விவசாயிகளுக்கு மாதம் வருமானமே ரூ.7500-க்கும் குறைவாகும்.
ஜனநாயகத்தின் பின்னடைவு
இந்த பீகார் தேர்தல் முடிவானது, இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை தரவில்லை.. இது ஜனநாயகத்திற்கான பின்னடைவு ஆகும்..
இந்த 5 ஆண்டு கால நிதிஷ்குமார் ஆட்சியில் என்னதான் செய்தார்கள்? 15 பாலங்கள் இடிந்து விழுந்திருக்கின்றன.. அப்படியிருந்தும் மோடி தான் வேண்டும், நிதிஷ்குமார்தான் வேண்டும் என்று நினைத்தா ஓட்டு போட்டிருப்பார்கள்? கண்டிப்பாக கிடையாது.. பெண்களுக்கு தந்த ரூ.10000" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications